Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி ப்ளேயிங் 11 வெளியானது.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியது.. யார் யாருக்கு இடம்?- விவரம்

சவுத்தாம்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 வெளியாகியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.

இங்கிலாந்து களம்

இங்கிலாந்து களம்

இங்கிலாந்து பிட்ச்சில் பேட்டிங்கை விட பவுலிங் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் நகரில் அடுத்த 5 நாட்களிலும் வானத்தில் கருமேகம் சூழ்ந்திருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. அவ்வப்போது மழைப்பொழிவு இருக்கும் என்றும் தெரிகிறது. இதனால் சவுத்தாம்டன் பிட்ச் ஈரப்பதம் நிறைந்து வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். பிட்ச்-ல் ஈரப்பதம் இருந்தால் பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும் எனக்கூறப்படுகிறது.

நீடித்த குழப்பம்

நீடித்த குழப்பம்

ஆனால் இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அஸ்வின் - ஜடேஜா என 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது. மற்றொரு புறம் ஜடேஜாவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டு 4 வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என்றும் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக முகமது சிராஜுக்கு வாய்ப்பு இருக்கும் என ப்ளேயிங் 11 குறித்து பல்வேறு கணிப்புகள் உலா வந்தன.

 இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அனைவரும் எதிர்பார்த்தபடியே ப்ளேயிங் 11 அமைந்துள்ளது. 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களில் நட்சத்திர வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி கூட்டணி கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் ஒன்று கூடியுள்ளது. இதில் இஷாந்த் சர்மா இங்கிலாந்து களத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவ வீரர் ஆவார். அதே போல முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா நல்ல ஃபார்மில் உள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளர்கள்

சுழற்பந்துவீச்சாளர்கள்

இதே போல சுழற்பந்துவீச்சில் அஸ்வின் மற்றும் ஜடேஜா முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடியவர். நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல ஜடேஜா பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் லோயர் ஆர்டரில் பேட்டிங்கிற்கு உதவுவார் என்ற காரணத்தால் சேர்க்கப்பட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி

Story first published: Thursday, June 17, 2021, 20:59 [IST]
Other articles published on Jun 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+