Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. முக்கிய வீரர்கள் இல்லை.. முழு விவரம்

மும்பை: தென்னாப்பிரிக்க அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன் அனைத்து அணிகளும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகின்றன.

அந்தவகையில் இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் மோதவுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முழு பலத்தை களமிறக்கவுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்க தொடரில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது. ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் என ஆசிய கோப்பையில் இருந்தே அதே ஃபார்முலா தான். 3வது ஓப்பனருக்கே செல்லவில்லை.

மிடில் ஆர்டர் பேட்டிங்

மிடில் ஆர்டர் பேட்டிங்

மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். ஆனால் ஃபினிஷர் பணிகளுக்காக இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை. இதனால் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் விளையாடுகின்றனர். வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சஹார் என பலமான வீரர்கள் களமிறங்குகின்றனர். ஆனால் இதில் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டுள்ளார்.

 ஒதுக்கியது ஏன்?

ஒதுக்கியது ஏன்?

டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கான கடைசி போட்டி தென்னாப்பிரிக்க தொடர் தான். இதில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஒதுக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது. அவர்கள் தொடர்ந்து விளையாடி வருவதால், உடற்தகுதியை பரிசோதிக்க வேண்டும் என விளக்கம் அளித்துள்ளது.

Story first published: Monday, September 12, 2022, 21:10 [IST]
Other articles published on Sep 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+