Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ், இஷான் கிஷனுக்கு ஜாக்பாட்.. பிசிசிஐ ஒப்பந்தம்.. வருண் சக்கரவர்த்திக்கு முதல் கான்டிராக்ட்

மும்பை: பிசிசிஐ 2024-25 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நால்வரும் ஏ+ பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் பி பிரிவிலும், இஷான் கிஷன் சி பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஏ பிரிவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

BCCI Indian Cricket Team Player Contracts Shreyas Iyer Ishan Kishan

நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தங்களின் முதல் பிசிசிஐ ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர். இவர்கள் நால்வரும் சி பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.ஏ பிரிவில் கே.எல். ராகுல், முகமது சிராஜ், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பி பிரிவில் ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சி பிரிவில் 19 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்கள் ஏ+ பிரிவில் இருந்து ஏ பிரிவுக்கு மாற்றப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவர்கள் மூவரும் ஏ+ பிரிவிலேயே தொடர்ந்துள்ளனர்.

சம்பள விவரங்கள்:

  • சி பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்படும்.

  • பி பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்படும்.

  • ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்படும்.

  • ஏ+ பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்படும்.

பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தப் பட்டியல் 2024-25:

A+ கிரேடு:

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

A கிரேடு:

முகமது சிராஜ், கே.எல். ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பந்த்

B கிரேடு:

சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர்

C கிரேடு:

ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜூரெல், சர்பராஸ் கான், நிதீஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா

Story first published: Monday, April 21, 2025, 12:11 [IST]
Other articles published on Apr 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+