Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் ஜிம்பாப்வே.. பிசிசிஐ வெளியிட்ட 2026-27 கிரிக்கெட் அட்டவணை!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான உள்ளூர் போட்டிகளின் முழு அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணி இந்தியாவில் விளையாட உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை இந்தியாவில் மொத்தம் 22 சர்வதேச போட்டிகள் 17 வெவ்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன.

இதற்கு முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும், பின்னர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சென்று விளையாட உள்ளது. அதன்பிறகு இந்தியாவில் செப்டம்பர் 27 முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது.

BCCI Announces India Home Season 2026-27 Schedule Zimbabwe to Tour India After 24 Years Gap

தொடர்ந்து டிசம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் சிறப்பம்சமாக, கடந்த 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக ஜிம்பாப்வே அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இறுதியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஜனவரி மாதம் தொடங்குகிறது.

போட்டிகளின் முழு அட்டவணை:

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்:

27-செப்.-26 - 2:00 PM - முதல் ஒருநாள் போட்டி - திருவனந்தபுரம்
30-செப்.-26 - 2:00 PM - 2வது ஒருநாள் போட்டி - கவுகாத்தி
03-அக்.-26 - 2:00 PM - 3வது ஒருநாள் போட்டி - புதிய சண்டிகர்

06-அக்.-26 - 7:00 PM - முதல் டி20 போட்டி - லக்னோ
09-அக்.-26 - 7:00 PM - 2வது டி20 போட்டி - ராஞ்சி
11-அக்.-26 - 7:00 PM - 3வது டி20 போட்டி - இந்தூர்
14-அக்.-26 - 7:00 PM - 4வது டி20 போட்டி - ஹைதராபாத்
17-அக்.-26 - 7:00 PM - 5வது டி20 போட்டி - பெங்களூரு

இந்தியா - இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடர்:

13-டிச.-26 - 2:00 PM - முதல் ஒருநாள் போட்டி - டெல்லி
16-டிச.-26 - 2:00 PM - 2வது ஒருநாள் போட்டி - பெங்களூரு
19-டிச.-26 - 2:00 PM - 3வது ஒருநாள் போட்டி - அகமதாபாத்

22-டிச.-26 - 7:00 PM - முதல் டி20 போட்டி - ராஜ்கோட்
24-டிச.-26 - 7:00 PM - 2வது டி20 போட்டி - கட்டாக்
27-டிச.-26 - 7:00 PM - 3வது டி20 போட்டி - புனே

இந்தியா - ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்:

03-ஜன.-27 - 2:00 PM - முதல் ஒருநாள் போட்டி - கொல்கத்தா
06-ஜன.-27 - 2:00 PM - 2வது ஒருநாள் போட்டி - ஹைதராபாத்
09-ஜன.-27 - 2:00 PM - 3வது ஒருநாள் போட்டி - மும்பை

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்:

21-ஜன.-27 முதல் 25-ஜன.-27 - 9:30 AM - முதல் டெஸ்ட் போட்டி - நாக்பூர்
29-ஜன.-27 முதல் 02-பிப்.-27 - 9:30 AM - 2வது டெஸ்ட் போட்டி - சென்னை
11-பிப்.-27 முதல் 15-பிப்.-27 - 9:00 AM - 3வது டெஸ்ட் போட்டி - கவுகாத்தி
19-பிப்.-27 முதல் 23-பிப்.-27 - 9:30 AM - 4வது டெஸ்ட் போட்டி - ராஞ்சி
27-பிப்.-27 முதல் 03-மார்ச்-27 - 9:30 AM - 5வது டெஸ்ட் போட்டி - அகமதாபாத்

Story first published: Thursday, March 26, 2026, 16:15 [IST]
Other articles published on Mar 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+