For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா -நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - ரோகித் சர்மா, முகமது ஷமி சேர்ப்பு

Recommended Video

India squad for new zealand t20 series | நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி முழு விவரம்

டெல்லி : நியூசிலாந்தின் ஆக்லாந்தில் வரும் 24ம் தேதி துவங்கவுள்ள இந்தியா -நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

இலங்கையுடனான சர்வதேச டி20 தொடரை கைகொண்டு இந்த ஆண்டை வெற்றியுடன் துவங்கியுள்ள இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடன் சர்வதேச ஒருநாள் தொடரில் மோதவுள்ளது.

இதையடுத்து நியூசிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது.

ஆண்டின் முதல் வெற்றி

ஆண்டின் முதல் வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் சர்வதேச டி20 தொடரை இந்தியாவுடன் விளையாடினர். இதில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், மற்ற இரண்டு போட்டிகளில் அபார வெற்றி கொண்டு இந்தியா தொடரை கைப்பற்றியது.

ஆண்டின் முதல் வெற்றி

ஆண்டின் முதல் வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் சர்வதேச டி20 தொடரை இந்தியாவுடன் விளையாடினர். இதில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், மற்ற இரண்டு போட்டிகளில் அபார வெற்றி கொண்டு இந்தியா தொடரை கைப்பற்றியது.

சர்வதேச ஒருநாள் போட்டிகள்

சர்வதேச ஒருநாள் போட்டிகள்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் நாளை முதல் இந்தியா மோதவுள்ளது. நாளை மும்பையில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இதையடுத்து இரண்டாவது போட்டி வரும் 17ம் தேதி ராஜ்காட்டிலும் 3வது போட்டி 19ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறவுள்ளன.

10 போட்டிகளில் மோதல்

10 போட்டிகளில் மோதல்

இதையடுத்து நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணியினர் வரும் 24ம் தேதி முதல் சர்வதேச டி20 போட்டிகளிலும் தொடர்ந்து சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என 10 போட்டிகளில் விளையாட உள்ளனர்.

ஆக்லாந்தில் 24ம் தேதி துவக்கம்

ஆக்லாந்தில் 24ம் தேதி துவக்கம்

தொடர்ந்து போட்டிகள் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா மற்றும் முகமது ஷமி இருவரும் நியூசிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றபடி அணியில் அதிகளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

ரோகித் சர்மா, முகமது ஷமி சேர்ப்பு

ரோகித் சர்மா, முகமது ஷமி சேர்ப்பு

தொடர்ந்த போட்டிகள் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா மற்றும் முகமது ஷமி இருவரும் நியூசிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றபடி அணியில் அதிகளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

அணி அறிவிக்கப்படவில்லை

அணி அறிவிக்கப்படவில்லை

நியூசிலாந்திற்கு எதிராக சர்வதேச டி20 தொடரில் மோதும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக விளையாடப்பட உள்ள சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்படவில்லை.

பிசிசிஐ அதிகாரி தகவல்

பிசிசிஐ அதிகாரி தகவல்

நியூசிலாந்திற்கு எதிரான சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்படாததற்கு ஹர்திக் பாண்டியா பிட்னஸ் டெஸ்டில் தோல்வியுற்று அணியில் இடம்பெறாததே காரணம் என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிட்னஸ் தோல்விக்கு காரணம்

பிட்னஸ் தோல்விக்கு காரணம்

ரஞ்சி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடுவதை தவிர்த்து நியூசிலாந்து டூருக்காக ஹர்திக் பாண்டியா தயாராகி வந்தார். ஆனால் அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடியிருந்தால் அவரது பிட்னஸ் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்று பிசிசிஐ மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஜய்சங்கர் விளையாடுவார் என அறிவிப்பு

விஜய்சங்கர் விளையாடுவார் என அறிவிப்பு

இந்நிலையில் பிட்னஸ் டெஸ்ட்டில் ஹர்திக் பாண்டியா தோல்வியுற்றதால் அவர் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக விஜய்சங்கர் விளையாடுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டி20 அணி அறிவிப்பு

டி20 அணி அறிவிப்பு

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான டி20 தொடரில் விளையாடும் கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா களம் காண்கிறார். அணியில் கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த், ஷிவம் தூபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Monday, January 13, 2020, 11:53 [IST]
Other articles published on Jan 13, 2020
English summary
No big surprises in India's T20I squad for New Zealand Tour
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+