Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எம்பிஎல் ஸ்போர்ட்ஸ்தான் அடுத்த 3 வருஷத்துக்கு இந்திய அணியோட புது கிட் ஸ்பான்சர்... பிசிசிஐ

டெல்லி : அடுத்த 3 ஆண்டுகளுக்கு எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் தான் இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்சர் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக நைக் இருந்தநிலையில், கடந்த செப்டம்பர் மாதத்துடன் அதன் ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 2020 முதல் 2023 வரை எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் இந்திய அணியின் கிட்ஸ் ஸ்பான்சராக செயல்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் கிட் ஸ்பான்சர்

இந்திய அணியின் கிட் ஸ்பான்சர்

பிசிசிஐயின் கிட்ஸ் ஸ்பான்சராக கடந்த 2016 முதல் 2020 செப்டம்பர் மாதம் வரையில் நைக் செயல்பட்டு வந்தது. தற்போது அதன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் தற்போது எம்பிஎல் ஸ்போட்ஸ் நிறுவனத்துடன் கிட்ஸ் ஸ்பான்சர் மற்றும் வணிக பங்குதாரருக்கான புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்திய வீரர்களுக்கு கிட்ஸ்

இந்திய வீரர்களுக்கு கிட்ஸ்

இந்த நிறுவனம் தற்போது ஐபிஎல்லின் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள், சிபிஎல் அணி மற்றும் அயர்லாந்து மற்றும் யூஏஇ வாரியங்களுடன் ஸ்பான்சர்சிப் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய ஆண்கள் அணி, பெண்கள் அணி மற்றும் அன்டர் -19 அணிகளுக்கு கிட் ஸ்பான்சர்ஷிப் செய்யவுள்ளது.

வீரர்களுக்கு ஜெர்சி, உபகரணங்கள்

வீரர்களுக்கு ஜெர்சி, உபகரணங்கள்

இந்த ஒப்பந்தம் நவம்வர் 2020 முதல் டிசம்பர் 2023 வரை போடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் ஜெர்சி, உபகரணங்கள், ஷுஸ் போன்றவற்றையும் எம்பிஎல் வழங்கும். வரும் ஆஸ்திரேலிய தொடரிலிருந்தே இந்த ஒப்பந்தம் துவங்கவுள்ளது.

வீரர்களுக்கு புதிய ஜெர்சி

வீரர்களுக்கு புதிய ஜெர்சி

இந்திய அணியினருக்கு ஆஸ்திரேலிய தொடரில் புதிய ஜெர்சி வழங்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களுக்கும் ஜெர்சி உள்ளிட்டவற்றை விற்பனை செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, November 17, 2020, 14:10 [IST]
Other articles published on Nov 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+