Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் தலையெழுத்தை மாற்றப்போகும் 3 பேர்.. பிசிசிஐ நியமித்த புதிய கமிட்டி.. அவர்கள் பணி என்ன?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவிதியையே மாற்றி அமைக்கப்போகும் 3 நபர்கள் பிசிசிஐ-க்குள் என்ட்ரி தந்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி படுதோல்வியுடன் வெளியேறியதை அடுத்து, பிசிசிஐ பலகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேவையில்லாத விஷயங்களை நீக்கி வருகிறது.

அதன்படி சேட்டன் சர்மா தலைமையிலான ஒட்டுமொத்த தேர்வுக்குழுவும் நீக்கப்பட்டது. இந்திய அணியின் மனநல மேம்பாட்டு பயிற்சியாளராக இருந்த பேடி அப்டனும் நீக்கப்பட்டார்.

புதிய கமிட்டி உருவாக்கம்

புதிய கமிட்டி உருவாக்கம்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குள் "கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி" ( Cricket Advisory Committee ) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 3 பேர் கொண்ட இந்த கமிட்டியின் அதிகாரிகள் யார் என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பிரஞ்சபே, சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் அந்த பதவிகளை நிரப்பியுள்ளனர்.

யார் அவர்கள்?

யார் அவர்கள்?

மல்ஹோத்ரா இந்திய அணிக்காக 7 டெஸ்ட் மற்றும் 20 ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியவர். சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். பன்ரஞ்சபே 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சுலக்‌ஷனா நாயக் 46 சர்வதேச டெஸ்ட் மற்றும் 31 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்கவர்கள் ஆகும்.

அவர்களின் பணி என்ன?

அவர்களின் பணி என்ன?

இந்த குழு ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள், தேர்வுக்குழு செயல்பாடுகள், பயிற்சியாளர்களின் செயல்பாடுகள் என அனைத்தையும் கவனித்து முடிவுகளை எடுப்பார்கள். இவர்களின் முதல் பணியே இந்திய அணிக்கான புதிய தேர்வுக்குழுவை தேர்வு செய்ய வேண்டியது தான் ஆகும்.

100 பேர் போட்டி

100 பேர் போட்டி

இந்திய தேர்வுக்குழு அதிகாரி பதவிக்கு சுமார் 100 முன்னாள் வீரர்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் இருந்து சரியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர் அவர்கள் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்வார்கள். எனவே இந்தியாவின் எதிர்காலமே தற்போது இந்த 3 பேரின் கைகளில் உள்ளன.

Story first published: Thursday, December 1, 2022, 18:18 [IST]
Other articles published on Dec 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+