தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா ஆடுகிறார்.. அணி அறிவிப்பு
டெல்லி : அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள தென்ஆப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் தென்ஆப்ரிக்காவிற்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி 20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: கேப்டன் விராத் கோஹ்லி, முரளி விஜய், ராகுல், சிக்கர் தவான், புஜாரா, ரஹானே, ரோஹித் ஷர்மா, சஹா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, பார்த்திவ் படேல், ஹர்திக் பாண்டியா, புவ்னேஸ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் பும்ரா.
இதேபோல இலங்கைக்கு எதிரான டி 20 சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது: ரோஹித் ஷர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், டோணி, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, பும்ரா, முகமது சிராஜ், பசில் தம்பி, உனத்கட்.
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5ம் தேதி, கேப்டவுனில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி டிசம்பர் 30ம் தேதி தென் ஆப்ரிக்கா புறப்பட்டு செல்கிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இரு நாடுகளிடையே ஜனவரி 13ம் தேதியும், 3வது போட்டி ஜனவரி 24ல் ஜோகன்னஸ்பர்க்கிலும் தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய அணி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 16 வரை விளையாடுகிறது.


Click it and Unblock the Notifications