
இலங்கை சீரிஸ்
இந்த தொடரை முடித்த பிறகு இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. வரும் பிப். 25ம் தேதி முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் அதனை தொடர்ந்து 3 டி20 போட்டிகளில் விளையாடவிருந்தது. இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் சேரும். இதே போல டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியாக இருந்தது.

அட்டவணையில் மாற்றம்
இந்நிலையில் இந்த தொடரில் பிசிசிஐ அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது முதலில் டி20 போட்டிகளை நடத்திவிட்டு, அதன் பின்னர் டெஸ்ட் தொடரை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

என்ன காரணம்
இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பிப்ரவரி 20ம் தேதி வரை இத்தொடர் உள்ளது. எனவே பிசிசிஐ முதலில் டி20 தொடரை நடத்தினால் ஆஸ்திரேலியாவின் பபுளில் இருந்து நேரடியாக வீரர்கள் இந்தியாவுக்கு வந்துவிடுவார்கள்.

கோரிக்கை
இது பயோ பபுள் பாதுகாப்பு சிரமங்களை குறைக்கும். இதுவே டெஸ்ட் தொடர் என்றால் இலங்கையில் இருக்கும் சில வீரர்கள் வந்து முன்கூட்டியே பபுளில் இருக்க வேண்டியிருக்கும். எனவே பிசிசிஐ திட்டங்களை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காகவே பிசிசிஐ இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

அட்டவணை
பிப். 24 - முதல் டி20 போட்டி
பிப்.26 - 2வது டி20 போட்டி
பிப்.27 - 3வது டி20 போட்டி
மார்ச் 4 - 8 : முதல் டெஸ்ட் போட்டி
மார்ச் 12 - 16 : 2வது டெஸ்ட்


Click it and Unblock the Notifications