Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பைகான இந்திய அணி வெளியானது.. அதிரடி முடிவுகளை எடுத்த பிசிசிஐ.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது!

மும்பை: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Recommended Video

T20 World Cup 2022: India's Squad அறிவிப்பு! Bumrah, Shami வந்துட்டாங்க | Aanee's Appeal | *Cricket

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.

2 ஓப்பனர்கள் தான்

2 ஓப்பனர்கள் தான்

நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் கே.எல்.ராகுலுடன் மட்டுமே களமிறங்கியுள்ளனர். 3வது ஓப்பனர் கிடையாது. முதல் விக்கெட்டிற்கு வழக்கம் போல விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 நடுவரிசை வீரர்கள்

நடுவரிசை வீரர்கள்

ஆசிய கோப்பையில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே நிறைய குழப்பங்கள் இருந்த நிலையில் மீண்டும் அவர்கள் இருவரையுமே அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ. லோயர் ஆர்டரில் தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிய கோப்பையில் ஹூடா பெரியளவில் சோபிக்காத சூழலில் கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக அக்‌ஷர் பட்டேல் கொண்டு வரப்பட்டுள்ளார். இவருடன் அனுபவ வீரர்களான யுவேந்திர சாஹல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என மொத்தமாக 3 ஸ்பின்னர்கள் மட்டுமே களமிறங்கியுள்ளனர். தீபக் ஹூடா 4வது ஸ்பின்னராக அவ்வபோது உதவலாம்.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சில் தான் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுடன் ஆசிய கோப்பையில் கலக்கிய புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர்.

பேக் அப் தேர்வுகள்

பேக் அப் தேர்வுகள்

இந்திய அணியின் பேக் அப் வீரர்களும் பெரும் ஆலோசனைக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சில் முன்னணி வீரரான முகமது ஷமி அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இதே போல தீபக் சஹாரும் சேர்க்கப்பட்டிருக்கிறார். பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் ஐயரும், சுழற்பந்துவீச்சில் ரவி பிஷ்னாயும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய படை

இந்திய படை

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், யுவேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங்

Story first published: Monday, September 12, 2022, 18:28 [IST]
Other articles published on Sep 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+