Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ தேர்வுக்குழு.. மீண்டும் தலைவரான சேத்தன் சர்மா.. நிஜத்தில் ஒரு பருத்தி மூட்டை காமெடி.. விவரம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மாவை நியமித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சேத்தன் சர்மா தலைமையில் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

இதில், 2021 டி20 உலககோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை, 2022 டி20 உலக கோப்பை என அனைத்து தொடருக்கும் சேத்தன் சர்மா தலைமையிலான குழுவே, இந்திய அணியை தேர்வு செய்தது.

ஆனால், இதில் ஒரு முறை கூட இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை. மேலும் கேப்டன்களை மாற்றிய விவகாரத்தில் சேத்தன் சர்மா செயல்பட்ட விதம் சர்ச்சையை ஏற்டுத்தியது.

அடுக்கடுக்கான புகார்

அடுக்கடுக்கான புகார்

விராட் கோலியிடம் தகவலை தெரிவிக்காமல், ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் ஒரே ஆண்டில் 7 கேப்டன்களை மாற்றியது, பும்ராவை உடல் தகுதி அல்லாமல் டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு விளையாட வைத்தது போன்ற பல விமர்சனங்களில் சேத்தன் சர்மா சிக்கினார். இதே போன்று விருத்திமான் சாஹாவை அணியிலிருந்து நீக்கிவிட்டு, ஓய்வு பெறுங்கள் என கூறியது, பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு தராமல் இழுத்து அடித்தது என்று பல புகார்கள் சேத்தன் சர்மா மீது எழுந்துள்ளது .

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

இதன் காரணமாக சேத்தன் சர்மா குழுவை கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ அதிரடியாக நீக்கியது இதனைத் தொடர்ந்து புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு சுமார் 600 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் பிசிசிஐயின் ஆலோசனை குழு 11 பேரை தேர்வு செய்து நேர்முகத் தேர்வு நடத்தியது.

புதிய உறுப்பினர்கள்

புதிய உறுப்பினர்கள்

இதில் சுமார் 2 வாரத்திற்கு பிறகு தற்போது சேத்தன் சர்மாவையே மீண்டும் பிசிசிஐ தேதர்வுக்குழு தலைவராக நியமிக்க, ஆலோசனை குழு முடிவு எடுத்தது. அதன் பேரில் தற்போது பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதில் சிவ் சுந்தர், சுபராட்டோ பெனர்ஜி,சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீதரன் சரத்

ஸ்ரீதரன் சரத்

இதில் ஸ்ரீதரன் சரத் , தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்பது கூடுதல் தகவல். 100 ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடிய ஒரே தமிழக வீரர் என்ற பெருமையை அவர் பெற்று இருக்கிறார். 52 வயதான ஸ்ரீதரன் சரத் தற்போது தென் மண்டல தேர்வுக்குழு உறுப்பினராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே அண்டர் 19 அணியை தேர்வு செய்யும் குழுவில் இருந்தவர்.

Story first published: Saturday, January 7, 2023, 18:04 [IST]
Other articles published on Jan 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+