Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேஎல் ராகுலுக்கு டும் டும் டும்.. காதலி ஆதியாவை கரம் பிடிக்கிறார்.. எங்கு, எப்போது தெரியுமா?

மும்பை: வரும் ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டி இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல். அண்மைக் காலமாக டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வியால், அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ஆனால் கேஎல் ராகுல் மிகச்சிறந்த வீரர் என்பதையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் தவிர்க்க முடியாத வீரர் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. விரைவில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் ஃபார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுகள் காதல்

3 ஆண்டுகள் காதல்

இதனிடையே ஐபிஎல் தொடரில் இருந்து கேல் ராகுல் சொந்த வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான ஆதியா ஷெட்டியுடன் காந்த மூன்று ஆண்டுகளாக கேஎல் ராகுல் காதல் உறவில் இருக்கிறார். கடந்த ஆண்டு ஆதியா ஷெட்டியின் பிறந்தநாளன்று இருவரும் தங்களின் காதலை இன்ஸ்டாகிராம் மூலம் உறுதி செய்தனர்.

ராகுல் - ஆதியா ஷெட்டி

ராகுல் - ஆதியா ஷெட்டி

மும்பையில் இவர்கள் இருவரும் தனி வீட்டில் தங்கி இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டி இருவரும் தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளனர். வரும் ஜனவரி மாதம் கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஜனவரியில் திருமணம்

ஜனவரியில் திருமணம்

இதற்காக ஜனவரி மாதத்தில் விடுமுறை அளிக்குமாறு கேஎல் ராகுல் பிசிசிஐ-க்கு கடிதம் அனுப்பியுள்ளார். கேஎல் ராகுலின் கோரிக்கை கடிதத்தை பிசிசிஐ ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் ஜனவரி மாதம் இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுனில் ஷெட்டி தகவல்

சுனில் ஷெட்டி தகவல்

அண்மையில் ஆதியா ஷெட்டி தந்தை சுனில் ஷெட்டி, கேஎல் ராகுல் - ஆதியா திருமணத்தை விரைவில் நடத்த திட்டமிட்டு வருகிறோம். இன்னும் எந்த நாள் என்று முடிவு செய்யவில்லை. திருமண நாளை முடிவு செய்த பின், விரைவில் அனைவருக்கும் அறிவிப்போம் என்று தெரிவித்தார். இதனிடையே மும்பையில் கேஎல் ராகுல் - ஆதியா திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஎல் ராகுலின் திருமணத்தில் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 2, 2022, 20:21 [IST]
Other articles published on Dec 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+