Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை டீமில் கொரோனா.. பிசிசிஐ "அவசர" மீட்டிங்.. ஏமாற்றம் தரும் "திடீர்" முடிவு? - ரசிகர்கள் ஷாக்

மும்பை: இலங்கை கிரிக்கெட் அணியில் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக பிசிசிஐ அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால், தொடருக்கே பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

விராட் கோலி தலைமையிலான மெயின் அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், இந்திய 20 வீரர்கள் கொண்ட 'ஏ' அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது பிசிசிஐ.

 3 ஒருநாள், 3 டி20

3 ஒருநாள், 3 டி20

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 பயிற்சியாளர் டிராவிட்

பயிற்சியாளர் டிராவிட்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 வீரர்கள் அதிர்ச்சி

வீரர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், இலங்கை அணியில் அதன் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகிய இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய அந்த அணி வீரர்கள் தற்போது தனிமைபப்டுத்தப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தில் இருந்து வந்த பயிற்சியாளர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தொடர் ரத்து?

தொடர் ரத்து?

எனினும், முதல் கட்ட சோதனையில் வீரர்கள் எவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கொரோனா கன்ஃபார்ம் ஆகியிருக்கும் சூழலில், அடுத்தக்கட்ட சோதனையில் வீரர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த சூழலில், பிசிசிஐ தரப்பில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. அதில், இலங்கை வீரர்களுக்கு கொரோனா ஏற்படும் பட்சத்தில் என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதில், தொடரை ரத்து செய்யலாமா? அல்லது முற்றிலும் புதிய வீரர்கள் கொண்ட இலங்கை அணியை தேர்வு செய்யச் சொல்லலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில், டிராவிட் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்யலாம் என்றும் சொல்லியும், பிசிசிஐ 'பார்க்கலாம்' என்ற ரீதியிலேயே பதில் அளித்திருப்பதால், எந்நேரத்திரலும் தொடர் ரத்து செய்யப்படும் அச்சம் நிலவுகிறது.

Story first published: Friday, July 9, 2021, 18:17 [IST]
Other articles published on Jul 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+