Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ல் நடந்த தவறு இனி நடக்காது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பயோ பபுள்.. பிசிசிஐ புதிய ப்ளான்

மும்பை: ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட தவறு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடக்கக்கூடாது என்பதற்காக பிசிசிஐ புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

Recommended Video

IPLல் நடந்த தவறு நடக்காது; England Tourக்கான Bio-Bubble | OneIndia Tamil

நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூன் 18ல் தொடங்குகிறது. இதனை முடித்துவிட்டு இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது.

இதற்காக இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லவுள்ள, நிலையில் அனைத்து வீரர்களின் வீடுகளுக்கும் மருத்துவக்குழுவை அனுப்பியுள்ளது பிசிசிஐ.

பயோ பபுள்

பயோ பபுள்

இந்திய அணி வரும் மே.2ம் தேதி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளது. நேரடியாக அங்கு சென்றால் 14 நாட்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டும் மேலும் பயிற்சியில் ஈடுபடமுடியாது. இதனால் இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக வீரர்கள் அனைவரையும் மும்பையில் 2 வார காலம் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். பின்னர் இங்கிலாந்து சென்றால் அங்கு 10 நாட்கள் மற்றும் குவாரண்டைனில் இருந்து பயிற்சி மேற்கொள்ளலாம்.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இந்நிலையில் வீரர்கள் மும்பைக்கு வருவதற்கு முன்னதாகவே, அவர்களின் வீட்டிற்கு மருத்துவக்குழுவை அனுப்பி பிசிசிஐ கொரோனா பரிசோதனை செய்யவுள்ளது. இதற்காக வீரர்களின் தற்போதைய முகவரிகளை சேகரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கபடுகிறது. ஐபிஎல் தொடரில் ஏற்பட்டதை போன்று பபுளுக்கு கொரோனா நுழைவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட தொடர்

நீண்ட தொடர்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் இந்த தொடர் செப்.14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே இந்திய வீரர்கள் சுமார் 3 மாதங்கள் அங்கு முகாமிட வேண்டும் என்பதால் குடும்பத்தாரும் அவர்களுடன் இங்கிலாந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்பத்தாருக்கும் அவர்களது வீடுகளிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளது.

மும்பை வீரர்களுக்கு விதிவிலக்கு

மும்பை வீரர்களுக்கு விதிவிலக்கு

இந்த பரிசோதனைகள் முடிந்த பிறகு அனைத்து வீரர்களும் மே.19ம் தேதிக்குள் மும்பைக்கு வருகை தரவுள்ளனர். அதன் பிறகு அங்கு 2 வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு மே.2ம் தேதி இங்கிலாந்து செல்வார்கள். எனினும் மும்பையிலேயே வசித்து வரும் விராட் கோலி, ரோகித் சர்மா, ரஹானே ஆகியோருக்கு ஒரு வாரம் மட்டும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என வதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அவர்கள் வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Story first published: Thursday, May 13, 2021, 19:36 [IST]
Other articles published on May 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+