Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு வந்த பெரிய சிக்கல்.. ரூ.15 கோடி மோசடி வழக்கு.. விளக்கம் அளிக்க பிசிசிஐ கெடு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் தோனிக்கு தற்போது மிகப்பெரிய சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்று நான்காண்டுகள் ஆகி விட்டது.

எனினும் ஐபிஎல் தொடரில் தோனி ஒரு சாதாரண வீரராக விளையாடி வருகிறார். இந்த நிலையில் 15 கோடி ரூபாய் மோசடி வழக்கு ஒன்றில் தோனி சம்பந்தப்பட்ட இருப்பதாகவும் அது குறித்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் மௌரியா என்பவர் பிசிசிஐ நெறிமுறை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.

ms dhoni bcci legal case csk


அதில் 15 கோடி ரூபாய் மோசடி வழக்கு ஒன்று தோனி சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் அதில் உண்மை என்ன என்பது குறித்து பிசிசிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ நெறிமுறை ஆணைக்குழு, வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் தோனி இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தோனியின் மீதான புகாரி உண்மை என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தோனியின் முன்னாள் நண்பர்கள் ஆன திவாகர், சௌமியா தாஸ் ஆகியோர் அவருடைய பெயரில் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைக்க ஒப்பந்தம் போட்டார்கள். இதில் வரும் லாபத்தை தோனிக்கு கொடுக்க அவர்கள் முடிவெடுத்தார்கள்.

ஆனால் திவாகர், சௌமியா தாஸ் ஆகியோர் 7 பயிற்சி மையங்கள் அமைத்தும், தோனிக்கு தரவேண்டிய பணத்தை தரவில்லை. இதனால் தோனி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார்.மேலும் தமக்கு 15 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என்றும் அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.இதில் தோனிக்கு தான் பணம் வரவேண்டுமே, தவிர தோனிக எந்த ஒரு மோசடியிலும் ஈடுபடவில்லை.

ஆனால் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்றால் அந்த நபர் தேவையில்லாமல் தோனியின் பெயரில் பிசிசிஐயிடம் புகார் அளித்திருக்கிறார்.இதற்கு தான் தற்போது பிசிசிஐ விளக்கம் கேட்டு தோனிக்கு கெடு விதித்திருக்கிறது. இதில் என்ன நடந்தது என்று விவரத்தை தோனி வழங்கினால் பிரச்சனை முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 11, 2024, 21:21 [IST]
Other articles published on Aug 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+