Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BCCI Awards: ராகுல் டிராவிட், மிதாலி ராஜுக்கு மாபெரும் கவுரவம்.. கில்லுக்கு சிறந்த வீரர் விருது

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் வழங்கப்படும் 2024-25 சீசனுக்கான பிசிசிஐ நமன் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் ரோஜர் பின்னி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், விளையாட்டில் மாபெரும் பங்காற்றிய முன்னாள் மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு மகளிர் பிரிவு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

ரோஜர் பின்னி 1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய அங்கமாக இருந்தவர். ராகுல் டிராவிட் 24000க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்களை குவித்து இந்திய பேட்டிங்கின் தடுப்புச்சுவராக திகழ்ந்தவர். அதேபோல், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 7805 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக திகழும் மிதாலி ராஜ், இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முகமாக அறியப்படுகிறார்.

BCCI Awards 2024-25 Rahul Dravid Mithali Raj Win Lifetime Achievement Shubman Gill Best Player

இந்த விழாவில், சிறந்த சர்வதேச ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட உள்ளது. சிறந்த சர்வதேச மகளிர் வீராங்கனைக்கான விருதை ஸ்மிருதி மந்தனா தனது 5வது முறையாக பெறுகிறார்.

மேலும், சமீபத்தில் ஐசிசி கோப்பைகளை வென்று அசத்திய 5 இந்திய அணிகள் கௌரவிக்கப்பட உள்ளன. மகளிர் அண்டர் 19 உலகக்கோப்பை 2025, ஆடவர் அண்டர் 19 உலகக்கோப்பை 2026, சாம்பியன்ஸ் டிராபி 2025, மகளிர் உலகக்கோப்பை 2025 மற்றும் ஆடவர் டி20 உலகக்கோப்பை 2026 ஆகிய தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளைச் சேர்ந்த அனைவருக்கும் பிசிசிஐ சார்பில் சிறப்புப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட உள்ளன.

பிசிசிஐ 2024-25 விருதுகளின் முழுமையான பட்டியல்:

  • கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது: ராகுல் டிராவிட் மற்றும் ரோஜர் பின்னி

  • பிசிசிஐ மகளிர் வாழ்நாள் சாதனையாளர் விருது: மிதாலி ராஜ்

  • பாலி உம்ரிகர் விருது (சிறந்த சர்வதேச வீரர்): சுப்மன் கில்

  • சிறந்த சர்வதேச வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா

  • சிறந்த சர்வதேச அறிமுக வீரர்: ஹர்ஷித் ராணா

  • சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனை: ஸ்ரீ சரணி

  • மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்: ஸ்மிருதி மந்தனா

  • மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்: தீப்தி ஷர்மா

  • லாலா அமர்நாத் விருது (உள்ளூர் லிமிடெட் ஓவர் தொடரில் சிறந்த ஆல்-ரவுண்டர்): ஆயுஷ் மத்ரே (மும்பை)

  • லாலா அமர்நாத் விருது (ரஞ்சி கோப்பையில் சிறந்த ஆல்-ரவுண்டர்): ஹர்ஷ் துபே (விதர்பா)

  • மாதவ்ராவ் சிந்தியா விருது (ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் - எலைட் குரூப்): ஒய் வி ரத்தோர் (விதர்பா)

  • மாதவ்ராவ் சிந்தியா விருது (ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் - பிளேட் குரூப்): சினேஹல் கௌதங்கர் (கோவா)

  • மாதவ்ராவ் சிந்தியா விருது (ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - எலைட் குரூப்): ஹர்ஷ் துபே (விதர்பா)

  • மாதவ்ராவ் சிந்தியா விருது (ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - பிளேட் குரூப்): சுசித் ஜே (நாகாலாந்து)

  • எம்.ஏ. சிதம்பரம் டிராபி (அண்டர் 23 நாயுடு கோப்பையில் அதிக ரன்கள் - எலைட் குரூப்): மேக்நீல் எச் என் (கர்நாடகா)

  • எம்.ஏ. சிதம்பரம் டிராபி (அண்டர் 23 நாயுடு கோப்பையில் அதிக ரன்கள் - பிளேட் குரூப்): ஆர் ஜஸ்வந்த் ஸ்ரீராம் (பாண்டிச்சேரி)

  • எம்.ஏ. சிதம்பரம் டிராபி (அண்டர் 23 நாயுடு கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - எலைட் குரூப்): விக்கி ஓஸ்வால் (மகாராஷ்டிரா)

  • எம்.ஏ. சிதம்பரம் டிராபி (அண்டர் 23 நாயுடு கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - பிளேட் குரூப்): திப்ஜோதி சைகியா (அசாம்)

  • எம்.ஏ. சிதம்பரம் டிராபி (அண்டர் 19 கூச் பெஹார் கோப்பையில் அதிக ரன்கள் - எலைட் குரூப்): நித்யா ஜே பாண்டியா (பரோடா)

  • எம்.ஏ. சிதம்பரம் டிராபி (அண்டர் 19 கூச் பெஹார் கோப்பையில் அதிக ரன்கள் - பிளேட் குரூப்): ராகவன் ராமமூர்த்தி (பாண்டிச்சேரி)

  • எம்.ஏ. சிதம்பரம் டிராபி (அண்டர் 19 கூச் பெஹார் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - எலைட் குரூப்): ஹேமசுதேஷன் ஜே (தமிழ்நாடு)

  • எம்.ஏ. சிதம்பரம் டிராபி (அண்டர் 19 கூச் பெஹார் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - பிளேட் குரூப்): அர்கஜித் ராய் (திரிபுரா)

  • ஜெக்மோகன் டால்மியா டிராபி (அண்டர் 16 விஜய் மெர்ச்சன்ட் கோப்பையில் அதிக ரன்கள் - எலைட் குரூப்): சாந்தனு சிங் (உத்தர பிரதேசம்)

  • ஜெக்மோகன் டால்மியா டிராபி (அண்டர் 16 விஜய் மெர்ச்சன்ட் கோப்பையில் அதிக ரன்கள் - பிளேட் குரூப்): பிரீதம் ராஜ் (பீகார்)

  • ஜெக்மோகன் டால்மியா டிராபி (அண்டர் 16 விஜய் மெர்ச்சன்ட் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - எலைட் குரூப்): யஷ்பர்தன் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்)

  • ஜெக்மோகன் டால்மியா டிராபி (அண்டர் 16 விஜய் மெர்ச்சன்ட் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - பிளேட் குரூப்): கிஷன் சர்க்கார் (திரிபுரா)

  • ஜெக்மோகன் டால்மியா டிராபி (சிறந்த சீனியர் உள்ளூர் ஒருநாள் வீராங்கனை): ஷஃபாலி வர்மா (ஹரியானா)

  • ஜெக்மோகன் டால்மியா டிராபி (சிறந்த ஜூனியர் உள்ளூர் வீராங்கனை): ஈரா ஜாதவ் (மும்பை)

  • உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த நடுவர் 2023-24: உல்ஹாஸ் காந்தே (விதர்பா)

  • பிசிசிஐ உள்ளூர் தொடர்களில் சிறந்த செயல்பாட்டிற்கான விருது: மும்பை கிரிக்கெட் சங்கம்

Story first published: Saturday, March 14, 2026, 14:09 [IST]
Other articles published on Mar 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+