For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் அம்பயர் அசாத் ரவுப்பிற்கு 5 வருட தடை விதித்த பிசிசிஐ

By Veera Kumar

மும்பை: பாகிஸ்தான் நடுவர் அசாத் ரவுப் மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு தங்களது போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

BCCI bans Pakistan umpire Asad Rauf for 5 years

அசாத் ரவுப் ஐபிஎல் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர். அப்போது, சூதாட்ட புக்கிகளிடம் விலை உயர்ந்த பரிசு பொருட்களை அவர் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது, அசாத் ரவுப் பெட்டிங்கில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த பிசிசிஐ அசாத் ரவுப்பை, 5 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. ஐபிஎல் உள்ளிட்ட பிசிசிஐ தொடர்பான எந்த ஒரு போட்டிகளிலும் அவரை நடுவராக பணியாற்ற இதன் மூலம் தடை உருவாகியுள்ளது. பிசிசிஐயின் ஊழல் தடுப்பு விதிமுறை பிரிவுகளின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, February 12, 2016, 15:10 [IST]
Other articles published on Feb 12, 2016
English summary
The Board of Control for Cricket in India (BCCI) today imposed a 5-year ban on Pakistani umpire Asad Rauf after he was found guilty of "misconduct and corruption".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X