For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த யுவராஜ் சிங் இவர்தான்.. தமிழக வீரரை முழுமையாக நம்பும் பிசிசிஐ.. தேடி வந்த வாய்ப்பு

மும்பை : தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக பிசிசிஐ-யால் பார்க்கப்படுகிறார் என கூறப்படுகிறது.

அதனால் தான் அவருக்கு ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் தற்போது ஆஸ்திரேலிய டி20 தொடர் என இந்திய அணியில் இடைவிடாமல் வாய்ப்பு தேடி வருகிறது என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் யுவராஜ் சிங்கை யாராலும் மறக்க முடியாது. 2011 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அவர் கை கொடுக்காமல் போயிருந்தால் இந்திய அணியால் உலகக்கோப்பை வென்று இருக்க முடியாது. உலகக்கோப்பை மட்டுமின்றி பல தொடர்களில் யுவராஜ் சிங் தன் ஆல் - ரவுண்டர் திறமையால் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறார்.

BCCI believes Washington Sundar would be next Yuvraj Singh

யுவராஜ் சிங் சென்ற பின் அப்படி ஒரு வீரரை இந்திய அணி தேர்வு செய்து இன்று வரை அணியில் தொடரச் செய்து வருகிறது. அவர் ரவீந்திர ஜடேஜா. யுவராஜ் சிங் போலவே இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை ஸ்பின்னர் ஆவார் ஜடேஜா.

தற்போது ரவீந்திர ஜடேஜாவிற்கு 34 வயது ஆகும் நிலையில் அவரால் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் ஆட முடியும். குறிப்பாக டி20 அணியில் இருந்து அவரை நிரந்தரமாக நீக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஜடேஜா அணியை விட்டு சென்றால், "அடுத்த யுவராஜ் சிங்" என்ற இடத்தை நிரப்ப ஒரு பேட்டிங் திறன் கொண்ட ஸ்பின்னர் அணிக்கு தேவை.

அந்த இடத்தை நிரப்பவே வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் அவ்வப்போது வாய்ப்பு பெற்று வருகிறார். தற்போது 2023 உலகக்கோப்பை தொடர் முடிந்துள்ளதால், இனி பல மூத்த வீரர்கள் டி20 அணியில் நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதில் வாஷிங்டன் சுந்தர் முதன்மையான வீரராக நீண்ட கால வாய்ப்பை பெறுவார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியிலும் வாஷிங்டன் சுந்தர் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் தன் 18 வயதிலேயே இந்திய அணியில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், ஜடேஜா , குல்தீப் யாதவ், சாஹல் போன்ற வீரர்கள் அணியில் இருந்ததால் வாய்ப்பு இன்றி தவித்து வந்தார். ஆனால், இனி அவருக்கான இடம் டி20 அணியில் கிடைக்கக்கூடும். அதை அவர் சரியாக பயன்படுத்தி தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலிய டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி விவரம் : சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ( விக்கெட் கீப்பர்), வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், சிவம் துபே, ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

Story first published: Tuesday, November 21, 2023, 9:57 [IST]
Other articles published on Nov 21, 2023
English summary
BCCI believes Washington Sundar would be next Yuvraj Singh in Indian T20 team. Washington Sundar from Tamil Nadu is said to be seen by the BCCI as a future star player of the Indian team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+