Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு 2 தமிழக வீரர்களுக்கு அழைப்பு.. ஆஸி.யை சமாளிக்க திட்டம்.. மொத்தம் 6 பேர் சேர்ப்பு

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவதற்காக தற்போது இந்திய அணியும் காய் நகர்த்தி வருகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் சுழற்பந்துவீச்சை சமாளிக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

அஸ்வினின் ஜெராக்ஸ் வீரர், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என ஆஸ்திரேலிய வீரர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகுவது போல், பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்திய ஆடுகளம் குறித்து தெரிந்த, அதில் விளையாடிய பேட்ஸ்மேன்களுடன் ஆலோசனை கூட்டத்தையும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நடத்த உள்ளனர்.

2 தமிழக வீரர்கள்

2 தமிழக வீரர்கள்

தற்போது இந்திய அணியும் தங்களது அதிரடி திட்டங்களை நடைமுறைப்படத்த உள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாக்பூரில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியில் கூடுதலாக 6 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு தமிழக வீரர்களும் அடங்குவார்கள்.

6 பேர் சேர்ப்பு

6 பேர் சேர்ப்பு

வாசிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், மாயங் மார்க்கண்டே, சௌரப் குமார் பில்கிட் நாரங்கல் ஆகிய 6 வீரர்களும் இந்திய வீரர்களுக்கு பயிற்சி செய்ய உதவுவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என்பதால், வாசிங்டன் சுந்தர் மட்டும் மெயின் அணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

 சுழற்சி முறை

சுழற்சி முறை

ஏற்கனவே இந்திய அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் உள்ள நிலையில், இந்த 6 சுழற்பந்தவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி எடுக்கும் விதமாக இந்த வீரர்கள் சுழற்சி முறையில் பந்துவீசுவார்கள். இதில் சாய் கிஷோர் திறமையான வீரர்.

சாய் கிஷோர் ஏன்?

சாய் கிஷோர் ஏன்?

நன்றாக உயரமாக இருக்கும் சாய் கிஷோர், பந்தை பவுன்ஸ் செய்து வலது கை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கெடுப்பார். இதனால் விராட் கோலி, ரோகித், ராகுல் போன்ற வீரர்கள் சாய் கிஷோர் பந்தை எதிர்கொள்வது மூலம் நாதன் லயானை எளிதாக சமாளிக்கலாம். இதே போன்று மாயங் மார்க்கண்டே போன்ற லேக் ஸ்பின்னர்களையும் எதிர்கொள்வது மூலம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கொடுக்கும்.

ஸ்பெஷல் பயிற்சி

ஸ்பெஷல் பயிற்சி

இந்திய அணியும் சுழற்பந்துவீச்சு மீது கவனம் செலுத்தி வருவதால், ஆடுகளம் எப்படி இருக்கும் என்று நாம் முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால், இந்திய அணி வீரர்களே சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினார்கள். அண்மையில் கூட வங்கதேச டெஸ்டில் தோல்வியின் விழும்பு வரை இந்தியா சென்றது. இதனால் தான் இம்முறை இந்திய அணி வீரர்களுக்கு ஸ்பெஷல் பயிற்சி அளிக்க உள்ளது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

விராட் கோலி , புஜாரா, ரோகித் ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கும். ஏனென்றால் தற்போது பேட்டிங்கில் இந்தியாவை காப்பாற்ற ரிஷப் பண்ட் கூட இல்லை. இதனால் சூர்யகுமார் யாதவை ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் களமிறக்கி நடுவரிசையில் அதிரடியாக ஆடும் வாய்ப்பு தரப்படலாம் . மேலும் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.

Story first published: Sunday, February 5, 2023, 7:11 [IST]
Other articles published on Feb 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+