Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையில் நவ.18-ல் அவசரமாக கூடுகிறது பி.சி.சி.ஐ செயற்குழு

BCCI calls Emergent WC meeting in Chennai on Nov 18
சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) அவசர செயற்குழு கூட்டம் வரும் 18-ந் தேதி சென்னையில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 20-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். பிக்சிங் வழக்கில் முட்கல் அறிக்கையில் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய செயற்குழுவின் அவசர் கூட்டம் வரும் 18-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் பிக்ஸிங் விவகாரம், முட்கல் அறிக்கை, வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை நடத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Story first published: Saturday, November 15, 2014, 17:17 [IST]
Other articles published on Nov 15, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+