
ராகுல் மீது வந்த புகார்
பிசிசிஐ-இம் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராகுல் ஜோஹ்ரி முன்பு வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் தவறாக நடந்து கொண்டதாக சில பெண்கள் சமூக வலைதளத்தில் புகார் அளித்தனர்.

விசாரணைக்கு முன் குழப்பம்
அதை விசாரிக்க முடிவு செய்தது பிசிசிஐ-யின் நிர்வாக கமிட்டி. அதில் இடம் பெற்றுள்ள இரண்டு உறுப்பினர்களில் ஒருவரான டயானா விசாரணைக்கு முன்பு ராகுல் பதவி விலக வேண்டும் என கூறினார். ஆனால், மற்றொரு உறுப்பினர் வினோத் ராய் விசாரணைக்கு பின் பதவி விலகுவது பற்றி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என கூறினார்.

விசாரணை குழுவில் யார்?
இறுதியில், ராகுல் முக்கிய நிர்வாக விஷயங்களில் தலையிடாமல் பார்த்துக் கொண்டனர். அப்படியே விசாரணை தொடங்கியது. விசாரணை குழுவில் அலகாபாத் முன்னாள் நீதிபதி ராகேஷ் சர்மா, முன்னாள் டெல்லி மகளிர் கமிசன் தலைவர் பர்கா சிங், மகளிர் உரிமை தொடர்பாக வாதாடி வரும் வக்கீலான வீணா கௌடா ஆகியோர் இடம் பெற்றனர்.

தள்ளுபடி ஆனது
இந்த விசாரணையின் முடிவில் ராகுல் ஜோஹ்ரி மீது உள்ள குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்தது விசாரணை குழு. அந்த குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளது விசாரணை குழு. இதன் மூலம் ராகுல் ஜோஹ்ரி எந்த பிரச்சனையும் இன்றி இனி பிசிசிஐ அலுவலகப் பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications