Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஜித் அகார்கரின் முதல் யாக்கர்.. போல்ட் ஆனதோ ரசிகர்கள் தான்.. WI தொடருக்கு 4 ஸ்பின்னர் தேவையா?

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20 அணி நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென்று அறிவிக்கப்பட்டது. அஜித் அகார்கரின் வருகையால் பிசிசிஐயின் நடவடிக்கையில் பல மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக தேர்வு குழுவினர் அணி அறிவித்துவிட்டு எந்த வீரர்களை எதற்காக நாங்கள் தேர்வு செய்யவில்லை? எதற்காக இவர்களை தேர்வு செய்தோம் என்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பார்கள்.

BCCI Chief selector Ajith agarkar debacle in his first assignment

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பழக்கம் அப்படியே கைவிடப்பட்டது. இதனை மீண்டும் அஜித் அகார்கர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவு அனைவரும் படுத்து தூங்கிய பிறகு அணி அறிவிப்பு வந்தது. அறிவிப்பு வருகிறது என்றே தெரியவில்லை என்றால் பத்திரிகையாளர்கள் சந்திப்பு எப்படி நடக்கும். சரி அதை விடுங்கள் அடுத்தது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் ஐபில் தொடரில் இரண்டு சீசன்களாக கலக்கி வரும் இந்திய டி20 அணியில் இடம் பெறுவார் என ரசிகர்கள் அனைவரும் நம்பினர். ஆனால் அஜித் அகார்கருக்கு பதில் அவரை சேர்க்கவில்லை. மேலும் தாம் மும்பையில் இருந்து வந்தவர் என்பதை நிரூபிக்கும் விதமாக மும்பையை சேர்ந்த திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். சரி அதையும் விடுங்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அதிகபட்சமாக பிளேயிங் லெவனில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதே ஆச்சரியம் தான். இந்த நிலையில் இந்திய டி20 அணியில் நான்கு சுழற் பந்து வீச்சாளர்களை அஜித் அகார்கர் வைத்திருக்கிறார்.

அதில் சாகல், ரவி பிஸ்னாய், குல்திப் யாதவ் என மூன்று லெக் ஸ்பின்னர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அக்சர்பட்டேல் ஆல்ரவுண்டராக அணியில் இடம் பெற்றிருக்கிறார். இதற்கு ஒரே மாதிரி பந்து வீசக்கூடிய மூன்று பவுலர்கள் அதற்கு பதில் ரிங்கு சிங்கையாவது சேர்த்திருக்கலாமே என ரசிகர்கள் கருதுகின்றனர். இதே போன்று ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ், தீபக்சாஹர் போன்ற வீரர்களுக்கும் இடம் தரப்படவில்லை. இதனால் அணித்தேர்வில் மாற்றம் நடக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அஜித் அகார்கர் தனது யாக்கரை போட்டு போல்ட் ஆக்கிவிட்டார்.

Story first published: Thursday, July 6, 2023, 13:37 [IST]
Other articles published on Jul 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+