Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஊசி போட்றாங்க தெரியுமா ? பெரும் சர்ச்சையில் சிக்கிய சேத்தன் சர்மா.. ரகசிய கேமிராவில் சிக்கினார்

மும்பை : பிசிசிஐ தேர்வு குழுவில் தலைவரான சேத்தன் சர்மா தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கிருக்கிறார்.

கங்குலி பிசிசிஐ தலைவராக இருக்கும்போது சேத்தன் சர்மா இதே பொறுப்பை வகித்து பல்வேறு பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டார்.

குறிப்பாக விராட் கோலியை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதில் சேத்தன் சர்மாவின் பங்கு மிகப் பெரியது என அப்போதே குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

அரசியல்

அரசியல்

சேத்தன் சர்மா தேர்வு செய்யும் அணி குறித்தும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இதனை அடுத்து அவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் ரோஜர் பின்னி தலைமையில் புதிய நிர்வாகம் வந்தவுடன் எந்தப் பதவியில் இருந்து சேத்தன் சர்மா நீக்கப்பட்டாரோ தற்போது அதே பதவிக்கு வந்துள்ளார்.

விராட் கோலி மோதல்

விராட் கோலி மோதல்

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்று சேத்தன் சர்மாவை ரகசிய கேமரா வைத்து பொறிவைத்து பிடித்துள்ளது. அதில் ஒரு நபரிடம் சேத்தன் சர்மா பல்வேறு விவகாரங்களை பேசியது கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் கங்குலி விராட் கோலிக்கு இடையே மோதல் ஏற்பட்டது குறித்து சேத்தன் பேசியுள்ளார்.

ஊசி போடுகிறார்கள்

ஊசி போடுகிறார்கள்

கங்குலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் , சேத்தன் சர்மா கூறியிருப்பது அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதேபோன்று சேத்தன் சர்மா அந்த வீடியோவில் பல வீரர்கள் காயம் முழுமையாக குணமடையாத நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் சில வீரர்கள் ஸ்டெராய்டு ஊசியை செலுத்தி கொண்டு உடல் தகுதியை எட்டி அணிக்குள் நுழைந்து வருவதாகவும் சேத்தன் சர்மா அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

அதிர்வலை

அதிர்வலை

சேத்தன் சர்மாவின் இந்த வீடியோ இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சேத்தன் சர்மா அதிரடியாக நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பி சி சி ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ குறித்து ஜெய்ஷா விசாரணை நடத்தி உரிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, February 14, 2023, 23:49 [IST]
Other articles published on Feb 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+