For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது ஏன் யோ யோ டெஸ்ட் லேட்டா நடந்துச்சு.. சபா கரீம் விளக்கம் இதோ!

Recommended Video

யோயோ தேர்வில் வென்று இங்கிலாந்து செல்லும் ரோஹித் சர்மா- வீடியோ

பெங்களூர்: ஐபில் போட்டிகளின் காரணமாகவே யோ-யோ தகுதி தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் அலுவல்களுக்கான பொது மேலாளர் சபா கரீம் கூறியுள்ளார்.

ஐபில் போட்டிகள் நடைபெற்ற காரணத்தால்தான் யோ-யோ தேர்வு , அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்பு நடைபெற்றதாக சபாகரீம் கூறினார். வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வுக்கு தயாராகும் வகையில் போதுமான அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

bcci clarifies on yo yo test

இந்திய அணியில் இடம் பெற்று விளையாட யோ-யோ தகுதி தேர்வில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தேர்ச்சி பெற அவர்கள் 16.1 அளவிலான புள்ளிகள் பெற வேண்டியது கட்டாயமாகும்.

இதற்கு முன்னதாக யுவராஜ் சிங் மற்றும் ரெய்னா ஆகியோர் இதில் தகுதி பெறாதபோது மட்டுமே அவர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை என்றும் இந்த முறை மட்டுமே வீரர்களை தேர்வு செய்துவிட்டு உடல் தகுதி தேர்வு நடைபெற்றதாகவும் சபா கரீம் கூறினார்.

இப்போட்டிகளுக்கான அணிகள் மே 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் இந்தியாவில் ஐபில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சமீபத்தில் அம்பதி ராயுடு , மொஹம்மத் ஷமி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் உடல்தகுதி தேர்வில் தகுதி பெறாததால் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பதி ராயுடு இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், ஷமி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலு , ராயுடு இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஏ அணியிலும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னா அம்பதி ராயுடுக்கு பதிலாக இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாடவுள்ளார்.

Story first published: Thursday, June 21, 2018, 19:32 [IST]
Other articles published on Jun 21, 2018
English summary
Due to IPL , players were asked to take yo-yo Tests later, says BCCI's Saba Karim.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X