Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீரர்கள் அடிக்கடி காயம் அடைவதற்கு, ஐபிஎல் தொடரே காரணம்.. பிசிசிஐ சிஒஇ விளக்கம்

பெங்களூருவில் உள்ள 'பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' அதிகாரிகள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ச்சியாக காயம் அடைவதற்கு ஐபிஎல் அணிகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சுமார் 10 வீரர்கள் தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறுகிய மற்றும் நீண்ட கால காயங்களுக்காக CoE மையத்தில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.

CoE அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் அளித்துள்ள தகவலின்படி, சர்வதேச அளவில் விளையாடும் பல முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரின் போது தங்களுக்கு இருக்கும் காயங்களையும் பொருட்படுத்தாமல் விளையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

BCCI COE

"அளவுக்கு அதிகமாக உடலுக்கு அழுத்தம் தரும் வகையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மனித உடலுக்கு என்று ஒரு குறிப்பிட்ட எல்லை உள்ளது. குறிப்பாக அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் காயங்களில் இருந்து அவர்கள் எப்போது மீண்டு வருவார்கள் என்று கணிப்பது கடினம்."

கம்பீரை நம்பினால் வேஸ்ட்.. படிக்கல் எடுத்த முயற்சி.. இலங்கை ஸ்பின்னருக்காக தினமும் 3 மணி நேர பயிற்சி

கம்பீரை நம்பினால் வேஸ்ட்.. படிக்கல் எடுத்த முயற்சி.. இலங்கை ஸ்பின்னருக்காக தினமும் 3 மணி நேர பயிற்சி

"ஐபிஎல் அணிகளின் அழுத்தம் மற்றும் நிதி காரணங்களால் வீரர்கள் காயங்களுடன் விளையாடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் CoE Physios சிகிச்சைக்காக வந்து சேருகிறார்கள். அணியின் மருத்துவர்கள் மற்றும் CoE மருத்துவர்கள் தங்களின் கடமையை உணர்ந்து, வீரர்களின் பாதுகாப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால், இது தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு பெரும் சவாலாக மாறுகிறது," என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய வீரர்களின் காயங்கள் அதிகரிப்பது மட்டுமின்றி, அவர்கள் மீண்டும் களமிறங்குவதற்கான (Return-to-play) திட்டங்கள் குறித்தும் CoE மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டது தேர்வாளர்களுடனான தொடர்பு இடைவெளியைக் காட்டுவதாக சர்ச்சைகள் கிளம்பின.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் இரண்டு ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் CoE அமைப்பின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். கடந்த மார்ச் 2025 இல் விளையாட்டு அறிவியல் பிரிவின் (Sports Science) தலைவர் நிதின் படேல் வெளியேறிய பிறகு, அந்தப் பதவிக்கு நிரந்தர தலைவர் யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூரு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, லட்சுமண் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துப் பேசினார்.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை.. ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட சிராஜ்.. இந்திய அணி திரில் வெற்றி

Also Read

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை.. ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட சிராஜ்.. இந்திய அணி திரில் வெற்றி

"CoE என்பது வெறும் காயங்களில் இருந்து குணமாகும் மறுவாழ்வு மையம் மட்டுமல்ல, வீரர்கள் தங்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த உதவும் பெரிய பொறுப்பும் அதற்கு உள்ளது. எனவே, 'குற்றம் சாட்டுவது' என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில், அந்த வார்த்தை யாரையாவது பலிகடா ஆக்குவது போல் அமைந்துவிடும். CoE மற்றும் இரு அணிகளின் (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள்) நிர்வாகத்திற்கும், மருத்துவக் குழுவிற்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது. அவர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு மிகவும் சீராகவும் வெளிப்படையாகவும் நடைபெறுகிறது," என்று லட்சுமண் தெளிவுபடுத்தியுள்ளார்.

Story first published: Sunday, August 9, 2026, 18:43 [IST]
Other articles published on Aug 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+