Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ஐ நடத்த விடாமல் சதி செய்யும் அந்த நபர்.. கடும் கோபத்தில் பிசிசிஐ.. வெளியான தகவல்!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரை நடத்தாவிட்டால் பிசிசிஐக்கு மட்டும் சுமார் 4,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும்.

Recommended Video

IPL நடத்த விடாமல் சதி... கொந்தளிக்கும் BCCI

அதனால், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது.

ஆனால், அதன் முயற்சிகளுக்கு ஒருவர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என பிசிசிஐ தற்போது வெளிப்படையாக குற்றம் சாட்டத் துவங்கி உள்ளது.

ஐசிசி தலைவர்

ஐசிசி தலைவர்

அந்த நபர் முன்னாள் பிசிசிஐ தலைவரும், தற்போதைய ஐசிசி தலைவருமான ஷஷான்க் மனோகர். அவர் ஐசிசி தலைவர் ஆனது முதல் பிசிசிஐக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. ஆனால், பிசிசிஐ எப்போதும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக பேசியதில்லை.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

பிசிசிஐயில் இருக்கும் லாபிக்களின் அதிகார மோதலின் ஒரு பகுதிதான் இது. ஐசிசி தலைவராக இருக்கும் ஷஷான்க் மனோகரின் பதவிக் காலம் இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக டி20 உலகக்கோப்பை பற்றிய முக்கிய முடிவை எடுக்க வேண்டியது உள்ளது.

விரும்பவில்லை

விரும்பவில்லை

2020 டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த தொடரை நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது. தொடரை நடத்த வேண்டிய ஆஸ்திரேலியா தாங்கள் தொடரை நடத்த விரும்பவில்லை என்றே கூறி விட்டது.

இரண்டு கூட்டங்கள்

இரண்டு கூட்டங்கள்

இந்த நிலையில், 2020 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைப்பது தான் ஒரே முடிவு. ஆனால், அதை ஐசிசி அறிவிக்காமல் நாட்களை கடத்தி வருகிறது. இதுவரை இது தொடர்பாக விவாதம் செய்ய இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டது.

குற்றம் சுமத்திய அதிகாரி

குற்றம் சுமத்திய அதிகாரி

ஆனால், அந்த இரண்டு கூடங்களிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவே கூறிய பின்பும் டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது, ஐபிஎல் தொடருக்கு சிக்கல் உருவாக்கத்தான் என பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி குற்றம் சுமத்தி உள்ளார்.

ஐபிஎல் திட்டம்

ஐபிஎல் திட்டம்

டி20 உலகக்கோப்பை நடக்காத பட்சத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தவே ஐசிசி இவ்வாறு செய்வதாக கருதப்படுகிறது.

எல்லோருக்கும் பாதிப்பு

எல்லோருக்கும் பாதிப்பு

ஐசிசி டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கும் முடிவை அறிவிக்காமல் இருப்பது ஐபிஎல் தொடரை மட்டுமல்ல, மற்ற அணிகளின் இருதரப்பு தொடருக்கான திட்டங்களையும் பாதிப்பதாக அந்த பிசிசிஐ அதிகாரி கூறி உள்ளார். ஐசிசி-யே கிரிக்கெட்டுக்கு குழி பறிப்பது போலத்தான் உள்ளது இது.

Story first published: Thursday, June 18, 2020, 19:19 [IST]
Other articles published on Jun 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+