ஹர்திக் பாண்ட்யா தலையில் இடி.. கோடிகளை இழந்த புஜாரா - ரகானே.. பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம் முடிவானது!
மும்பை: பிசிசிஐ வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தத்தில் முன்னணி வீரர்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளனர்.
ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அளவிலான வீரர்களை தேர்ந்தெடுத்து பிசிசிஐ-ன் நேரடி ஊதிய ஒப்பந்தம் போடப்படும்.
அந்தவகையில் 2022 - 2023ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தங்கள் மற்றும் வீரர்களில் சம்பள விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

4 பிரிவுகளின் விவரம்
மொத்தம் 4 பிரிவுகளாக ஒப்பந்தம் பிரிக்கப்பட்டிருக்கும். அதில், ஏ+ பிரிவுக்கு தலா ரூ 7 கோடி, ஏ பிரிவிற்கு ரூ.5 கோடியும், பி பிரிவுக்கு ரூ.3 கோடியும் வழங்கப்படும். கடைசி பிரிவான "சி" ல் இடம்பெறுபவர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவில் யார்?
அந்தவகையில் உட்சபட்ச பிரிவான ஏ+ல் இந்தாண்டும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 3 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல்.ராகுலுக்கு ஏ பிரிவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹர்திக் பாண்ட்யாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

பாண்ட்யாவுக்கு சரிவு
ஏ பிரிவில் இடம்பெற்று வந்த பாண்ட்யா ஏ+ பிரிவுக்கு கூட செல்ல வாய்ப்பிருந்தது. ஆனால் இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். இந்தாண்டு ‘சி' பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரின் ஊதியம் ரூ. 1 கோடி மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல சட்டீஸ்வர் புஜாரா மற்றும் ரகானேவும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

புஜாரா - ரகானே இடம்
டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடி வந்த அவர்கள், இந்தாண்டு பி பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் சம்பளம் ரூ. 3 கோடியாகும். இந்த இருவருக்கும் இனி டெஸ்ட் எதிர்காலம் இருக்குமா என்பதிலேயே சந்தேகம் இருந்தது. ஆனால் தற்போது சற்று நம்பிக்கை பெற்றுள்ளனர்.
Recommended Video

தவானின் நிலை
இவர்களை போலவே முன்னணி வீரர்களாக இருந்து வரும் புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான் ஆகியோர் சி பிரிவுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் உமேஷ் யாதவுக்கும் சி பிரிவில் தான் இடம் கிடைத்துள்ளது. முன்னணி சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவுக்கு ஒப்பந்தத்திலேயே இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications