Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம் வெளியீடு.. முன்னணி வீரர்களின் சம்பளம் எவ்வளவு? கோலி சம்பளத்தில் என்ன மாற்றம்

மும்பை: பல்வேறு மாற்றங்களுடன் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரரின் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

Recommended Video

IPL 2022 : BCCI instructs IPL Teams to reach Mumbai from Mar 8 | Oneindia Tamil

சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்கும் வீரர்களின் ஊதியம் ஆண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும்.

அந்தவகையில் 2022 - 2023ம் ஆண்டிற்கான, வீரர்களின் புதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஒப்பந்த விதிமுறைகள்

ஒப்பந்த விதிமுறைகள்

பிசிசிஐ ஒப்பந்தம் 4 மொத்தமாக பிரிவுகளாக இருக்கும். ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரருக்கு ரூ.7 கோடி வழங்கப்படும். ஏ பிரிவிற்கு ரூ.5 கோடியும், பி பிரிவுக்கு ரூ.3 கோடியும் வழங்கப்படும். கடைசி பிரிவான "சி" ல் இடம்பெறுபவர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனியர்களின் ஊதியம்

சீனியர்களின் ஊதியம்

இதில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று வீரர்கள் மட்டும் ஏ+ பிரிவில் இடம்பிடித்துள்ளனர். கடந்தாண்டும் இவர்கள் 3 பேர் தான் ஏ+ பிரிவில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதும், அவருக்கான ஊதியத்தில் எந்தவித மாற்றத்தையும் பிசிசிஐ கொண்டு வராதது பாராட்டப்பட்டு வருகிறது.

பி பிரிவு

பி பிரிவு

ஆனால் இந்திய அணியின் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் ஏ பிரிவில் தான் இடம்பெற்றுள்ளார். அதில் முகமது ஷமி, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கே.எல்.ராகுல் என மொத்தம் 5 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ‘பி' பிரிவில் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சட்டீஸ்வர் புஜாரா, ரகானே, அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், இஷாந்த் சர்மா ஆகியோர் பி பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

சி பிரிவில் யார்?

சி பிரிவில் யார்?

"சி" பிரிவில் ஷிகர் தவான், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஹனுமா விஹாரி, யுவேந்திர சாஹல், சூர்யகுமார் யாதவ், சாஹா, மயங்க் அகர்வால், தீபக் சஹார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஊதியம் ரூ.1 கோடியாகும்.

Story first published: Thursday, March 3, 2022, 9:59 [IST]
Other articles published on Mar 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+