பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியல்.. ரிஷப் பண்ட் சூப்பர், ரெய்னா அவுட்
Recommended Video

மும்பை: ரூ.5 கோடி சம்பளம் பெறும் ஏ பிரிவில் தோனி, புஜாரா, அஸ்வின், ஜடேஜாவுடன் ரிஷப் பண்டும் இணைந்துள்ளார்.
2019 - 2020 ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. இதில் மொத்தம் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ரூ.7 கோடி சம்பளம் வாங்கும் ஏ பிளஸ் பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா இடம் பெற்றுள்ளனர்.

ரூ.5 கோடி சம்பளம் பெறும் ஏ பிரிவில் தோனி, புஜாரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் இஷாந்த் சர்மா, சமி, குல்தீப் யாதவ், ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், ரஹானே ஆகியோருடன் ரிஷப் பண்டும் இடம் பிடித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா, ராகுல், உமேஷ் யாதவ், சாஹல் ஆகியோர் ரூ.3 கோடி சம்பளம் பெறும் பி பிரிவிலும் உள்னனர். கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே, விகாரி, கலீல் அகமது, சாஹா ஆகியோர் ரூ.1 கோடி சம்பளம் பெறும் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டில் வெளியான பட்டியலில் இருந்த ரெய்னா, முரளி விஜய், பார்த்தீவ் படேல், ஜெயந்த் யாதவ், அக்சர் படேல், கருண் நாயர் ஆகியோருக்கு இம்முறை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. தங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை சமீபத்தில் தொடங்கிய பிரித்வி ஷா, விஜய் சங்கர், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு ஒப்பந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.
ஒப்பந்த பட்டியலில் இடம் பெற குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒரு நாள் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும் என்று தகுதி இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அந்த இலக்கை அவர்கள் எட்டாததால் இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு ஒப்பந்தத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications