
100வது டெஸ்ட்
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் வரும் 4ஆம் தேதி மொகாலியில் நடைபெறுகிறது. இது விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

விராட் சொன்ன நோ
இந்த நிலையில், விராட் கோலியை சமாதனப்படுத்தும் முயற்சியாக 100வது டெஸ்ட்க்கு கோலியே அணியை வழிநடத்தி செல்லுமாறு பிசிசிஐ கோரிக்கை வைத்தது. ஆனால், விராட் கோலி அதனை ஏற்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ தற்போது ரோகித் சர்மாவை முழு நேர கேப்டனாக நியமித்தது. ஆனால் கோலி சொன்ன நோ.. பிசிசிஐ டாப் நிர்வாகிகளை கடுப்படைய செய்துள்ளது.

அனுமதி இல்லை
இதனால் விராட் கோலி விளையாடும் 100வது டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆனால் பெங்களூருவில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டிக்கு மட்டும் 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. ஒரே தொடருக்கு இரு விதமான முடிவுகளை பிசிசிஐ எடுத்திருப்பதன் மூலம், இது விராட் கோலிக்கு எதிராக எடுத்த முடிவாக தெரிவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ரசிகர்கள் வேதனை
100வது சர்வதேச டெஸ்ட் என்பது ஒவ்வொரு வீரருக்கும் மிகவும் முக்கியமான விஷயமாகும். அப்போது ரசிகர்கள் முன்னிலையில் விளையாடினால் தான் அது கௌரவம், உண்மையான மகிழ்ச்சி ஆகும். தற்போது கோலிக்கு அது கிடைக்காமல் போய்விட்டது, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டி20 போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்கு வந்தது உத்வேகம் அளிப்பதாக கோலி பேட்டி கொடுத்த நிலையில், இந்த முடிவை பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











