இந்திய அணியை காக்க நீங்கள் கோச்சாக வர வேண்டும்.. பிசிசிஐ நச்சரிக்கும் அந்த பிரபலம் யார் தெரியுமா?
மும்பை: மீண்டும் எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டனை நியமித்துவிட வேண்டும் என்று பிசிசிஐ தலைகீழாக நிற்கிறதாம். இதற்காக அவருக்கு போன் மேல் போன் போய்க்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டுள்ளன. உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கோச்சாக இருந்த இவர் பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பிறகு இந்திய அணி சிறப்பான பங்களிப்பை கொடுக்க தவறி வருகிறது என்பதே இந்த நச்சரிப்புகளுக்கு காரணம்.

உலக கோப்பை
2008 முதல் 2011வரை இந்திய கிரிக்கெட் அணியின், பயிற்சியாளராக விளங்கியவர், கேரி கிறிஸ்டன். தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரராக இருந்தவர். இவர் பயிற்சியாளராக இருந்தபோதுதான், இந்தியா 2011ல் உலக கோப்பையை வென்றது.

இந்திய அணியில் சுணக்கம்
ஆனால், அந்த தொடருக்கு பிறகு கிறிஸ்டன் ஓய்வு பெற்றுவிட்டார். இந்திய அணியின் செயல்பாட்டிலும் அதன்பிறகு உத்வேகம் குறைந்துவிட்டது. எனவே கிறிஸ்டனை வலைவீசி தேடிவருகிறது பிசிசிஐ.

வருது அழைப்பு
இந்நிலையில் சில நிகழ்ச்சிகளுக்காக மும்பை வந்துள்ள கிறிஸ்டன், அங்கு ஆங்கில பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனக்கு அழைப்பு வருவதை ஒப்புக்கொண்டார்.

கவுரவம்
நாலைந்து தொலைபேசி அழைப்புகளாவது வந்தவண்ணம்தான் உள்ளன. இதை ஒரு பெரிய கவுரவமாக நான் உணர்கிறேன். ஆனால், என்னால் அந்த பணியை ஏற்க முடியாத நிலையில் உள்ளேன் என்று கிறிஸ்டன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications