தலைமைப் பயிற்சியாளர் பதவி.. விண்ணப்பிக்க மேலும் டைம் கொடுத்தது பிசிசிஐ
டெல்லி: தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கேப்டன் விராத் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதலால் தன் பதவியிலிருந்து விலகிய நிலையில் அப்பதவிக்காக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அவரே அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்று பிசிசிஐ முடிவெடுத்தது.

ஆனால், கும்ப்ளேவுக்கும் , கோஹ்லிக்கும் இடையே மோதல் முற்றி கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிபதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது பிசிசிஐ. முன்னதா கும்ப்ளே, ஷேவாக் உள்பட 5 பேர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது கும்ப்ளே போய் விட்டார். விண்ணப்பிக்க விதிக்கப்பட்ட கால அவகாசத்தை வரும் ஜூலை 9-ஆம் தேதி வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.


Click it and Unblock the Notifications