
பிசிசிஐ உத்தரவு?
இந்திய வீரர்கள் தொடர்சியாக பயோ பபுள் வளையத்திற்குள் இருந்து வருவதால், அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை பிசிசிஐ எடுத்து வருகிறது. ஆனால் நேற்று வெளியான புதிய விதிமுறை கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. அதாவது கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை உண்ணக்கூடாது என உத்தரவிட்டதாக தெரிகிறது.

கிளம்பிய எதிர்ப்பு
இந்த அறிவுறுத்தலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியது. ஒரு சில அமைப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிகளை உண்ணக்கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தியதாக கொந்தளித்துள்ளனர். மேலும் வீரர்களின் உணவு பழக்கங்களில் பிசிசிஐ எப்படி தலையிடலாம் எனவும் கண்டனங்கள் குவிந்துள்ளது.

பிசிசிஐ-ன் பதில்
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ பொருளாளர் அருன் துமால், இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தரப்பிலிருந்து எந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. வெளியான தகவல்கள் அனைத்துமே வதந்திகள் தான், யாரும் நம்பாதீர்கள்.

திட்டவட்ட கருத்து
மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்பது குறித்த டையட் முறைகளை பிசிசிஐ-ல் இதுவரை ஆலோசித்ததே கிடையாது. உடல்நலத்தை மேம்படுத்துவதற்காக எந்தவகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வீரர்களே நன்கு அறிவார்கள். அவரிகளின் முடிவுகளில் பிசிசிஐ தலையிடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications