Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ இந்த ஆண்டு எவ்வளவு வரி கட்டியது தெரியுமா? மொத்த வருமானம் இத்தனை கோடியா?

ட்ரீம்11 (Dream11) ஸ்பான்சர்ஷிப் விலகல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாய் குறைபாடு போன்ற சவால்களைத் தாண்டி பிசிசிஐயின் நிதிநிலை வலிமையாக உள்ளது. இந்த பற்றாக்குறையை அடிடாஸ் (Adidas) மற்றும் அப்பல்லோ டயர்களுடனான (Apollo Tyres) போன்ற புதிய ஒப்பந்தங்கள் மூலம் பிசிசிஐ ஈடுசெய்ததாக தெரிவித்துள்ளது.

"ட்ரீம்11 உள்ளிட்ட ஸ்பான்சர்கள் விலகிய போதிலும், அடுத்த இரண்டரை ஆண்டு கால சைக்கில் புதிய ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் பெறப்பட்டது. ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறைச் சட்டம் 2025 இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ட்ரீம்11 தனது ₹358 கோடி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகியது. எனினும், புதிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் இந்த இழப்பை ஈடுசெய்யப் போதுமானதாக இருந்தன.

முன்னாள் பொருளாளரும் இணைச் செயலாளருமான பிரப்தேஜ் சிங் பாட்டியா 2025-26 நிதியாண்டுக்கான பிசிசிஐ வரைவு பட்ஜெட்டையும், 2024, 2025க்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளையும் சமர்ப்பித்தார். ₹7,988 கோடியாக இருந்த பிசிசிஐயின் பொது நிதி ₹11,346 கோடியாக உயர்ந்து ₹3,358 கோடி உபரியை ஈட்டியுள்ளது.

இந்த வளர்ச்சிக்கு "வலுவான வருவாய் ஆதாரங்களும் கவனமான நிதி நிர்வாகமும்" காரணம் என அறிக்கை குறிப்பிட்டது.2025-26 நிதியாண்டில் பிசிசிஐ ₹8,693 கோடி வருமானத்தை இலக்கு வைத்துள்ளது. ஐசிசி வருவாய் குறைவால் இது முந்தைய ஆண்டை விட சற்று குறைவாகும்.

இருப்பினும், "நிதி மேலாண்மைவட்டி வருவாய் ₹1,500 கோடியாக கணிசமாக அதிகரித்துள்ளது என அறிக்கை சுட்டிக்காட்டியது. வருமான வரிச் செலுத்துதலுக்காக ₹3,320 கோடியும், நிலுவை வழக்குச் செலவுகளுக்காக சுமார் ₹160 கோடியும் பிசிசிஐ ஒதுக்கியுள்ளதாக பாட்டியா தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, December 25, 2025, 23:30 [IST]
Other articles published on Dec 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+