Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றிக்கு காரணமாக இருந்த பும்ராவை மறந்த பிசிசிஐ.. கடுப்பாகி கோலி செய்த காரியம்

டி20 உலக கோப்பையில் வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில் பும்ராவை பிசிசிஐ மறந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. எனினும் இந்த வெற்றி கொண்டாட்டத்தை பயன்படுத்தி பும்ராவுக்கு சேர வேண்டிய புகழை விராட் கோலி கொடுத்தார்.

டி20 உலக கோப்பையை வென்றதை அடுத்து சுமார் இரண்டு மணி நேர பேரணிக்கு பிறகு இந்திய அணி வான்கடே மைதானத்தில் வந்தது. அப்போது பிசிசிஐ சார்பாக ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜெயிஷா கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கொடுத்த சத்தியத்தை பிசிசிஐ ஒளிபரப்பு செய்தது.

Indian Cricket Team virat kohli bumrah


அந்த வீடியோவில் டி20 உலக கோப்பையை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் வெல்லும். இது என்னுடைய சத்தியம் என்று ஜெய்ஷா பேசினார். அவர் பேசி முடித்தவுடன் இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவரின் வீடியோவும் வெளியிடப்பட்டது. அதில் ரோகித் சர்மா சிக்ஸர் அடிப்பது போலவும், விராட் கோலி சதம் அடித்து கொண்டாடுவதன் போலவும் சூரியகுமார் யாதவ், முஹம்மது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங்,குல்தீப் யாதவ், ஜடேஜா,சிவம் துபே போன்றவர்களின் வீடியோ ஒவ்வொன்றாக வந்தது.

ஆனால் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த பும்ராவின் புகைப்படம் மட்டும் அந்த வீடியோவில் வரவில்லை. இதனை நோட் செய்த விராட் கோலி தமக்கு பேச வாய்ப்பு கொடுத்த போது பும்ராவுக்கு சேர வேண்டிய புகழை சேர்த்தார். அப்போது பேசிய விராட் கோலி, இந்திய அணி வெற்றிக்கு ஒரு முக்கிய வீரர் தான் காரணம். இறுதிப்போட்டியில் கூட நாங்கள் மீண்டும் தோற்று விடுவோம் என்று ஒரு கட்டத்தில் நினைத்தேன்.

ஆனால் இந்த வீரர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தார். அது வேறு யாருமில்லை பும்ரா தான். பும்ரா தான் இந்த தொடரின் ஆட்டநாயகன். காரணம் முக்கிய கட்டத்தில் எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார். எல்லா புகழும் பும்ராவுக்கு தான் போய் சேர வேண்டும்.

பும்ராவை இந்த நாட்டின் சொத்து என்று அறிவிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதற்கு ஒரு கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்தால் முதல் கையெழுத்தை நான் இங்கே இப்பவே போடுகிறேன் என்று விராட் கோலி கூறினார். இதன் மூலம் பும்ராவுக்கு கிடைக்க வேண்டிய புகழ் வந்து சேர்ந்தது. பும்ராவை பிசிசிஐ எப்படி மறக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Story first published: Friday, July 5, 2024, 0:07 [IST]
Other articles published on Jul 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+