Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய் ஷா விக்கெட்டை எடுத்த கங்குலி..விறுவிறுப்பாக சென்ற பிசிசிஐ கிரிக்கெட்.ஜெய் ஷா 11 அதிரடி வெற்றி!

டெல்லி: பிசிசிஐ சார்பாக இன்று நடத்தப்பட்ட நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டியில் கங்குலி 11 அணியை வீழ்த்தி ஜெய் ஷா 11 அணி வெற்றிபெற்றது.

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அமைப்பின் வருடாந்திர கூட்டம் தற்போது நடக்க உள்ளது.இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவரங்கள் நடத்த போவதாக தகவல்கள் வருகிறது.

இந்த கூட்டத்தை முன்னிட்டு இன்று பிசிசிஐ அமைப்பில் இருக்கும் உறுப்பினர்களுக்கு இடையே நட்பு ரீதியான கிரிக்கெட் அகமதாபாத்தில் நடைபெற்றது. நாடு முழுக்க இருக்கும் மாநில கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் இணைந்து இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டு போட்டி நடந்தது.

 இரண்டு அணிகள்

இரண்டு அணிகள்

பிசிசிஐ தலைவர் கங்குலி 11 அணி மற்றும் செயலாளர் ஜெய் ஷா 11 அணி என்று இரண்டு அணிகள் மோதியது. இதில் சில முன்னாள் வீரர்களும் கலந்து கொண்டனர். ஜெய் ஷா அணியில் அசாருதீன் ஆடியது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் ஜெய் ஷா 11 அணி முதலில் ஆடியது. தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடிய ஜெய் ஷா அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டிற்கு 128 ரன்கள் எடுத்தது.

எப்படி

எப்படி

அசாருதீன் 37, ஜெயதேவ் ஷா 38 ரன்கள் எடுத்தனர். அணியின் கேப்டன் ஜெய் ஷா 2 ரன்கள் எடுத்தார் . 6 பந்துகள் பிடித்த ஜெய் ஷா விக்கெட்டை கங்குலி எடுத்தார். ஜெய் ஷாவின் பேட்டிங் இன்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

 எத்தனை

எத்தனை

இதன் பின் பேட்டிங் இறங்கிய கங்குலி 11 அணியும் அதிரடியாக ஆடியது. 12 ஓவர் முடிவில் அந்த அணியால் 100 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கங்குலி மிகவும் அதிரடியாக ஆடி 32 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். 4 பவர் போட்ட ஜெய் ஷா 2 விக்கெட் எடுத்தார். இவர் 39 ரன்கள் கொடுத்தார்.

 முடிவு

முடிவு

அதேபோல் ஜெய்தேவ் ஷா 2 விக்கெட் எடுத்தார். இதனால் கங்குலி அணி 4 விக்கெட்டிற்கு 100 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் கங்குலி அணி ஜெய் ஷா அணியிடம் தோல்வி அடைந்தது.

Story first published: Thursday, December 24, 2020, 18:02 [IST]
Other articles published on Dec 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+