Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 மாதங்களில் 3வது முறை.. இந்திய கிரிக்கெட்டில் குளறுபடி.. என்சிஏ மீது பாயும் பிசிசிஐ- என்ன நடவடிக்கை

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சிரமப்பட்டு வருவதாக கூறப்படும் சூழலில் பெங்களூரு என்.சி.ஏவில் குளறுபடி நடந்து வருகிறதா? என்ற விவாதம் கிளம்பியுள்ளது. இது குறித்து பிசிசிஐ விரைவில் நடவடிக்கை எடுக்கும் எனத்தெரிகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்த சூழலில் இந்தியா தரமான பதிலடியை கொடுத்தது.

ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் தனது 2வது சதத்தை விளாச, மற்றொருபுறம் விராட் கோலி தனது 3 வருட காத்திருப்புக்கு முடிவு கொடுத்தார். 2019ம் ஆண்டுக்கு பிறகு தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் காயம்

ஸ்ரேயாஸ் ஐயர் காயம்

இரட்டை சதத்தை நோக்க்கி சென்ற விராட் கோலி துரதிஷ்டவசமாக 186 ரன்களுக்கு அவுட்டானார். மறுபுறம் அவருக்கு உறுதுணையாக ஆடிய அக்‌ஷர் பட்டேல் 79 ரன்களை அடித்து அவுட்டானார். என்னதான் இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்தாலும், ஸ்ரேயாஸ் ஐயரால் விளையாட முடியாதது பின்னடைவாக அமைந்தது. முதுகுப்பகுதியில் மிகவும் வலிக்கிறது எனக்கூறிய உடனேயே அவர் ஸ்கேனிற்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யக்கூட வரவில்லை.

என்ன காயம்

என்ன காயம்

முதுகுவலிப்பிரச்சினை காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக ஓய்வில் இருந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்டில் மீண்டும் அணிக்கு திரும்பினார். ஆனால் உடனடியாக தற்போது அதே காயம் வேலையை காட்ட தொடங்கியுள்ளது. இதன் மூலம் குணமடையாத ஒரு வீரருக்கு ஃபிட்னஸ் சான்றிதழ் கொடுத்து அனுப்புகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறையல்ல.

3வது முறையாக தவறு

3வது முறையாக தவறு

கடந்த 6 மாதங்களில் இதுபோன்று ஃபிட்னஸ் சான்றிதழ் பெற்ற 3 வீரர்கள் மீண்டும் அதே காயத்தினால் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஓய்வில் இருந்து வருகிறார். இடையில் அவரை அவசர அவசரமாக அணிக்கு அழைத்து, பின்னர் காயம் பெரியதானது. இதனால் ஆத்திரமடைந்துள்ள பிசிசிஐ, பெங்களூரு என்.சி.ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறது.

ஐபிஎல்-ல் பாதிப்பு

ஐபிஎல்-ல் பாதிப்பு

காயம் அதிகமாக இருப்பதால், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதும் சந்தேகம் எனக்கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை அதற்கு அவரால் வர முடியவில்லை என்றால் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகமாகிவிடும். கொல்கத்தா அணியை தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் தான் வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 13, 2023, 11:31 [IST]
Other articles published on Mar 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+