“அடேங்கப்பா.. இது லிஸ்ட்லையே இல்லையே”.. ஹர்திக் பாண்ட்யாவுக்கு கங்குலி தரவுள்ள சர்ஃபரைஸ் - விவரம்!
மும்பை: அயர்லாந்து தொடரில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பெரிய சர்ஃபரைஸ் கொடுக்க காத்துள்ளார் சவுரவ் கங்குலி
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை முடித்த இந்திய அணி அடுத்தாக அயர்லாந்துக்கு சென்றுள்ளது.
அங்கு அந்த அணியுடன் வரும் ஜூன் 26ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.

அயர்லாந்து சுற்றுப்பயணம்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக சென்றுவிட்டனர். தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ம் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்காக சென்றுவிட்டார். இதனால் தற்போது கேப்டன் பதவி ஹர்திக் பாண்ட்யாவிடம் வந்துள்ளது.

ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி
குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பை வாங்கி கொடுத்த ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சியில் தனி கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக தென்னாப்பிரிக்க தொடரில் பண்ட்--க்கு பதிலாக பாண்ட்யா தான் கேப்டனாக செயல்பட்டிருக்க வேண்டும் எனும் அளவிற்கு நம்பிக்கையை சம்பாதித்துள்ளார்.

கங்குலி தந்த ஆச்சரியம்
இந்நிலையில் அந்த நம்பிக்கைக்கு விடியல் பிறக்கவுள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அடுத்து வரும் அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகளையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார். போட்டி முழுவதும் பாண்ட்யா எப்படி பவுலர்களை பயன்படுத்துகிறார், கேப்டனாக எப்படி வியூகம் வகுக்கிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கவுள்ளார்.

கேப்டன்சி சந்தேகம்
ரோகித் சர்மாவுக்கு பின்னர் யார் இந்திய அணியை வழிநடத்துவது என பெரிய குழப்பம் உள்ளது. கே.எல்.ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சொதப்பிவிட்டார். ரிஷப் பண்ட்-ம் தென்னாப்பிரிக்க தொடரின் முதல் 2 போட்டிகளில் தோல்வியை பெற்றுக்கொடுத்தார். எனவே மாற்று வீரராக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications