Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

48 மணி நேரம் கெடு.. 2வது டெஸ்ட்டிற்கான திட்டம்.. ஸ்ரேயாஸ் ஐயரால் இந்திய அணிக்கு வந்துள்ள குழப்பம்!

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டிக்காக அடுத்த 48 மணி நேரத்தில் வரக்கூடிய ஒரு அறிவிப்பை வைத்து தான் இந்திய அணி தனது திட்டத்தை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 17ம் தேதியன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த போட்டிக்கான இந்திய அணி ப்ளேயிங் 11ல் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படுவாரா? இல்லையா? என்பது தான் தற்போது பேசுப்பொருளாகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் அதிக ரன்களை அடித்த வீரராக இருந்தார். ஆனால் இந்தாண்டு தொடக்கத்தில் அவருக்கு ஏற்பட்ட முதுகுவலி பிரச்சினையால் விளையாடாமல் இருந்து வருகிறார்.

48 மணி நேர அவகாசம்

48 மணி நேர அவகாசம்

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அவர் விளையாடுவார் என எதிர்பார்த்த சூழலில் கடைசி நேரத்தில் விலகினார். இந்நிலையில் அவர் முழுவதுமாக குணமடைந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14ம் தேதியன்று ஸ்ரேயாஸ் ஐயருக்கு பெங்களூரு என்சிஏவில் உடற்தகுதி தேர்வு நடத்தப்படவுள்ளது. அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால் நேரடியாக டெல்லிக்கு கிளம்பிவிடுவார்.

குழப்பம்

குழப்பம்

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத போது அவரின் இடத்தில் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரராக திகழும் போதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முதல் போட்டியில் வெறும் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் அவரை நீக்கிவிட்டு மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயரை கொண்டு வருவார்களா? அல்லது சூர்யகுமாரே விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சரியான முடிவு எது?

சரியான முடிவு எது?

2வது டெஸ்ட் போட்டி நடைபெறும் டெல்லி அருண் ஜெட்லி மைதானமும் பெரும்பாலும் ஸ்பின்னர்களுக்கு உதவக்கூடியதாக தான் இருக்கும். கடந்த போட்டியில் மிடில் ஆர்டர் முழுவதுமாக சொதப்பியதால் சிக்கலில் இருந்த இந்திய அணியை அக்‌ஷர் பட்டேல் - ஜடேஜா ஜோடி தான் காப்பாற்றினர். எனவே இந்த முறை அதனை சரிசெய்யும் வகையில் ஸ்ரேயாஸை கொண்டு வருவதே சரியான முடிவாக இருக்கும்.

Story first published: Monday, February 13, 2023, 13:50 [IST]
Other articles published on Feb 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+