Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் அணிகளுக்கு செக்.. இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறைக்கான முழு விளக்கம் வெளியீடு.. ஆடிப்போன வீரர்கள்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொண்டு வரப்பட்டுள்ள 'இம்பேக்ட் ப்ளேயர்' விதிமுறை குறித்த முழு விளக்கத்தையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2023ம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து வருகிறது.

அந்தவகையில் எந்தெந்த அயல்நாட்டு வீரர்கள் விளையாடுவார்கள், புதிய விதிமுறைகள் என ஐபிஎல் அணிகளுக்கு இருக்கும் குழப்பங்களுக்கு இன்று பிசிசிஐ விளக்கம் அளித்திருந்தது.

அப்படி என்ன ரூல்ஸ்

அப்படி என்ன ரூல்ஸ்

இந்நிலையில் அதில் இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறைக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது. அதாவது 203ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் ஒவ்வொரு அணியிலும் 13 வீரர்கள் விளையாடும் வகையில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. சப்ஸ்டிடியூட் வீரர்களால் ஃபீல்டிங் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இனி அவர்களும் பேட்டிங் மற்றும் பவுலிங்கை செய்யலாம் என்ற அனுமதியை கொடுத்தது. ஆனால் இது எப்படி செயல்படும் என்ற விளக்கம் தற்போது தான் கொடுக்கப்பட்டுள்ளது.

4 வீரர்கள் அறிவிப்பு

4 வீரர்கள் அறிவிப்பு

ஒவ்வொரு அணி கேப்டனும் டாஸின் போதே ப்ளேயிங் 11 மட்டுமின்றி 4 சப்ஸ்டிடியூட் வீரர்களை அறிவிக்க வேண்டும். அதில் இருந்து ஒரே ஒரு வீரரை மட்டும் இம்பேக்ட் ப்ளேயராக அறிவித்து கேப்டன்கள் அழைத்து வரலாம். ஆனால் இம்பேக்ட் ப்ளேயராக ஒரு அணியின் கேப்டனோ, அயல்நாட்டு வீரர்களோ இருக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அயல்நாட்டு வீரரை இம்பேக்ட் ப்ளேயராக பயன்படுத்த விரும்பினால் ப்ளேயிங் 11ல் 3 அயல்நாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடியிருக்க வேண்டும்.

எப்போது பயன்படுத்தனும்

எப்போது பயன்படுத்தனும்

பேட்டிங் அணி ஒரு ஓவர் முடிந்த பிறகு இம்பேக் ப்ளேயரை வரவழைத்துக்கொள்ளலாம். பவுலிங் அணி முதல் விக்கெட் விழுந்த பிறகு இம்பேக் ப்ளேயரை அழைத்துக்கொள்ள முடியும். பேட்டிங் அணி ஆட்டத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் 13வது வீரரை பயன்படுத்த முடியும். ஆனால் பவுலிங் அணியால் ஓவர்களுக்கு மத்தியில் கொண்டு வந்து, மீதமுள்ள பந்துகளை வீச வைக்க முடியாது.

மீண்டும் வரவே முடியாது

மீண்டும் வரவே முடியாது

ஒருமுறை இம்பேக்ட் ப்ளேயர் களத்திற்கு வந்துவிட்டால், அவருக்காக வெளியேற்றப்படும் வீரர் அதன்பிறகு அந்த ஆட்டத்திற்குள் வரவே முடியாது. சப்ஸ்டிடியூட் வீரராக கூட உள்ளே வர முடியாது. ஒவ்வொரு அணியும் ஆட்டத்திற்கு ஒரே ஒரு இம்பேக்ட் வீரரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் அந்த ஒரு வீரரையும் பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பது கேப்டன்களின் முடிவு தான். எந்தவித கட்டாயமும் இல்லை எனக்கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 21, 2022, 18:42 [IST]
Other articles published on Dec 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+