Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதை செய்யனும், இல்லைனா கருணையே இல்ல”.. ரிஷப் பண்ட்-க்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை.. என்ன ஆனது?

மும்பை: இலங்கை தொடர் நெருங்கி வரும் சூழலில் இந்திய நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்-க்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் இடம் முழுமையாக பறிபோகும் என தெரிகிறது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர்கள் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு தொடர்களுக்குமான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. அதன்படி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலும், 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு ரோகித் சர்மா தலைமையிலும் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

ரிஷப் பண்ட் நீக்கம்

ரிஷப் பண்ட் நீக்கம்

இந்திய அணியில் முக்கியமான மாற்றம் என்றால் அது ரிஷப் பண்ட் இடம்பெறாதது மட்டுமே பார்க்கப்படுகிறது. எந்தவித காயமும் ஏற்படாத பண்ட்-க்கு ஓய்வு தரப்படவில்லை, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமாக செயல்பட்டதால் நம்பிக்கை இழந்த பிசிசிஐ, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் மீது கவனத்தை திருப்பியுள்ளது.

பிசிசிஐ திடீர் எச்சரிக்கை

பிசிசிஐ திடீர் எச்சரிக்கை

இந்நிலையில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ள பண்ட்-க்கு எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ரிஷப் பண்ட்-ன் உடற்தகுதி மோசமாக இருப்பதே, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சொதப்புவதற்கு காரணம். எனவே இனி உடற்தகுதியை நிரூபித்து, நன்றாக ஆட முடியும் என்று காட்டினால் மட்டுமே அணிக்கு அழைக்கப்படுவார் இல்லையென்றால் வாய்ப்பே கிடைக்காமல் உட்கார்ந்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அறிவுரை

மற்றொரு அறிவுரை

மேலும் சட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரகானே போன்றோர் உள்நாட்டு போட்டிகளில் விளையாடி நிரூபித்து வந்தனர். எனவே பண்ட்-க்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி நம்பிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவரை அவரின் இடத்தில் 50 ஓவர் அணியில் இஷான் கிஷன் விளையாடுவார். இவர் சமீபத்தில் இரட்டை சதத்தை விளாசி அசத்தினார். டி20 அணியில் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிகள்

புள்ளிகள்

50 ஓவர் கிரிக்கெட்டில் கடைசி 12 போட்டிகளில் வெறும் 336 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி 37 மட்டுமே ஆகும். டி20 கிரிக்கெட்டில் அதனை விட மோசமாக 21.41 என சராசரி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 61.81 வைத்து சிறப்பாக ஆடி வருவதால், 2023ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் டிராபியில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

Story first published: Thursday, December 29, 2022, 12:29 [IST]
Other articles published on Dec 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+