கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ வைத்த செக்.. சனிக்கிழமையுடன் அவகாசம் முடிகிறது.. ரசிகர்கள் குழப்பம்!
பெங்களூரு: இங்கிலாந்து தொடரில் கே.எல்.ராகுல் பங்கேற்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல்.ராகுல் காயம் காரணமாக வெளியேறி பெரும் பின்னடைவை கொடுத்தார்.

கே.எல்.ராகுலின் காயம்
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உடனடியாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த பிசியோதெரபிஸ்ட்கள், பெரிய காயங்கள் எதுவும் இல்லை, ஓரிரு நாளில் சரியாகிவிடும் என நம்பிக்கை அளித்திருந்தனர்.

உடல்தகுதி ரிப்போர்ட்
இதனால் கே.எல்.ராகுல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. வரும் ஜூன் 16ம் தேதியன்று இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்படுகின்றனர். அவர்களுடனேயே கே.எல்.ராகுலும் செல்வார் என தெரிவித்தனர். மற்ற வீரர்கள் தென்னாப்பிரிக்க தொடரை முடித்துக்கொண்டு செல்வார்கள்.

புது குழப்பம்
இந்நிலையில் இதில் குழப்பம் உருவாகியுள்ளது. கே.எல்.ராகுலின் காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதாகவும், அவரால் விளையாட முடியுமா என்பதில் சந்தேகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடை பகுதியில் உள்ள காயம் மிகவும் பொறுமையாக சரியாவதால், அவரால் முழு உடற்தகுதியை பெற முடியவில்லை.
Recommended Video

கடைசி வாய்ப்பு
இதுகுறித்து பேசியுள்ள அதிகாரி ஒருவர், கே.எல்.ராகுல் முதல் பேட்ச்சுடன் இங்கிலாந்து செல்ல மாட்டார். வரும் சனிக்கிழமையன்று அவருக்கு சிறிய உடற்தகுதி தேர்வு நடைபெறும். அதில் அவர் தேர்ச்சி அடைந்துவிட்டால், ஜூன் 20ம் தேதியன்று 2வது பேட்ச்சுடன் இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவார் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications