Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது ODI-ல் விராட் கோலி இருக்காரா? இல்லையா?..” பிசிசிஐ தந்த கடைசி நேர ட்விஸ்ட்.. முழு விவரம்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் பிசிசிஐ கடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்துள்ளது.

Recommended Video

IND vs ENG 2nd ODI England அணி அபார வெற்றி *Cricket

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று லண்டன் நகரத்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

ஏற்கனவே ஒரு வெற்றியுடன் முன்னிலையில் உள்ள இந்திய அணி இன்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2வது ODI போட்டி

2வது ODI போட்டி

எனவே இதற்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 தீவிர கவனத்துடன் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் வழக்கம் போல் கலக்கியிருந்ததால், புதிய ஓப்பனர் களமிறக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் முதல் விக்கெட்டில் தான் குழப்பம் உருவானது.

விராட் கோலியின் காயம்

விராட் கோலியின் காயம்

நட்சத்திர வீரரான விராட் கோலி, இங்கிலாந்துடனான டி20 தொடரின் போது காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவர் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, தனது ஃபார்ம் குறித்த விமர்சனங்கள் காரணமாக அவர் ஒதுங்கியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக 2வது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

பிசிசிஐ தந்த ட்விஸ்ட்

பிசிசிஐ தந்த ட்விஸ்ட்

இந்நிலையில் கடைசி நேரத்தில் பிசிசிஐ ட்விஸ்ட் கொடுத்துள்ளது. அதாவது போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு விராட் கோலி பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு, 2வது ஒருநாள் போட்டிக்கு தயாராகிறார் என குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் இந்த போட்டியில் கோலி விளையாடுவது உறுதியாகியுள்ளது.

விமர்சனங்களுக்கு முடிவு

விமர்சனங்களுக்கு முடிவு

விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சதமடிக்கவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. இதனால் இந்திய டி20 அணியில் இருந்தும் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. எனவே இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக ஆடினால் அணியில் மீண்டும் தனது இடத்தை உறுதி செய்துவிடுவார்.

Story first published: Thursday, July 14, 2022, 17:06 [IST]
Other articles published on Jul 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+