Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பிசிசிஐ வெளியிட்ட புதிய அப்டேட்.. ஏலம் எப்போது தெரியுமா??

மும்பை: 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்கள் ஏலம் குறித்து பிசிசிஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் அனைவரும் இதில் கவனம் செலுத்தி வரும் நேரத்தில் ஐபிஎல் குறித்தும் அப்டேட் தந்து அசத்தியுள்ளது பிசிசிஐ.

 வீரர்கள் ஏலம்

வீரர்கள் ஏலம்

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதியன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள்ளாக தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது இருந்தே அணிகளுக்குள் ஆலோசனையை தொடங்கியுள்ளது.

கூடுதல் சலுகை

கூடுதல் சலுகை

கடந்த சீசனில் ஐபிஎல் மெகா ஏலம் நடந்த சூழலில் அடுத்த சீசனுக்கு மினி ஏலம் மட்டுமே நடைபெறும். கடந்த ஏலத்தின் போது ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.90 கோடி செலவளித்துக்கொள்ளலாம் என அனுமதி தரப்பட்டது. ஆனால் அடுத்த சீசனுக்கான மினி ஏலத்தில் கூடுதலாக ரூ.5 கோடி சேர்க்கப்பட்டு ரூ.95 கோடி செலவளித்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

 போட்டி முறை மாற்றம்

போட்டி முறை மாற்றம்

ஏலம் மட்டுமல்லாது போட்டி முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது அடுத்தாண்டு ஐபிஎல் தொடர், 'ஹோம் அண்ட் அவே' முறையில் நடைபெறவுள்ளது. அதாவது அனைத்து அணிகளும் பாதி போட்டிகளை தங்களுடைய ஹோம் மைதானத்திலும், பாதி போட்டிகளை வேறு மைதானத்திலும் விளையாடக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு தான் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

போட்டி எப்போது?

போட்டி எப்போது?

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. போட்டி எண்ணிக்கைகள், வசதிகள் என பல்வேறு விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வர பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 17, 2022, 11:12 [IST]
Other articles published on Oct 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+