இவ்வளவு சீக்கிரமாகவா??.. அஸ்வின் விவகாரத்தில் பிசிசிஐ நடவடிக்கை.. இங்கிலாந்து தொடரில் விளையாடுவாரா?

மும்பை: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர் அஸ்வின் இணைவாரா என்பது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

வரும் ஜூலை 1ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கும் என்பதால் இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சென்றுவிட்டனர்.

சாவு பயத்த காமிச்சிட்டாங்க பரமா..!! திகிலை ஏற்படுத்திய அஸ்வின் விமான பயணம்.. என்ன நடந்தது?சாவு பயத்த காமிச்சிட்டாங்க பரமா..!! திகிலை ஏற்படுத்திய அஸ்வின் விமான பயணம்.. என்ன நடந்தது?

அஸ்வின் அப்டேட்

அஸ்வின் அப்டேட்

ஆனால் இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வினால் மட்டும் சக வீரர்களுடன் பயணிக்க முடியவில்லை. அஸ்வினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக குவாரண்டைன் செய்யப்பட்டார். நெகட்டிவ் என முடிவு வந்தால் தான் பயணம் செய்ய முடியும் என்பதால், அஸ்வின் இங்கிலாந்து டெஸ்டில் இருப்பாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

பிசிசிஐ தந்த அப்டேட்

பிசிசிஐ தந்த அப்டேட்

இந்நிலையில் அஸ்வினின் உடல்நலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், அஸ்வின் தனது குவாரண்டைனை முழுவதுமாக முடித்துவிட்டார். அவரின் உடல்நலம் நன்றாக உள்ளது. அவர் வரும் ஜூலை 23 - 24ம் தேதிக்குள் இங்கிலாந்து சென்றுவிடுவார். இதற்கான கடைசி கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

 ஆனால் ஒரு பின்னடைவு

ஆனால் ஒரு பின்னடைவு

அஸ்வின் அணியில் இணைவது மகிழ்ச்சி செய்தி என்ற போதும், மற்றொரு பின்னடைவு உள்ளது. அதாவது இந்திய அணி வரும் ஜூன் 24ம் தேதி முதல் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது. இதில் இங்கிலாந்து களத்தை நன்கு புரிந்துக்கொள்ள முடியும். ஆனால் அஸ்வினால் இதில் பங்கேற்க முடியாது என்பதால் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவாரா என்பதும் சந்தேகம் தான்.

 மாற்று வீரர் தயார்

மாற்று வீரர் தயார்

அஸ்வினுக்கு மாற்று வீரரையும் இந்திய அணி ஏற்கனவே தயார் செய்துவிட்டது. அவரின் இடத்திற்கு ஜெயந்த் யாதவை உறுதி செய்த ராகுல் டிராவிட், வரும் பயிற்சி போட்டியிலும் யாதவையே களமிறக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ashwin Health update ( இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் ) இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவாரா என்பது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
Story first published: Wednesday, June 22, 2022, 10:10 [IST]
Other articles published on Jun 22, 2022

Latest Videos

    + More
    POLLS
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Yes No
    Settings X