Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு கெடு விதித்த பிசிசிஐ... இனி உள்நாட்டு போட்டிகள் மட்டும் தான்.. அப்போ டி20 உலகக்கோப்பை??

லண்டன்: இந்திய வீரர் விராட் கோலிக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து புதிய கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துடனான தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு செல்லவுள்ளது.

இந்த தொடருக்கான அணியில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.

கோலிக்கு ஓய்வு

கோலிக்கு ஓய்வு

நாளை (ஜூலை 17) இங்கிலாந்துடனான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் கோலி, அதன்பின்னர் ஒருமாத காலத்திற்கு ஓய்வு பெறவுள்ளார். இந்த காலத்தில் நன்கு பயிற்சி பெற்று ஆசியக்கோப்பை தொடருக்கு தயாராகவுள்ளார் என பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விராட் கோலிக்கு கெடு

விராட் கோலிக்கு கெடு

இந்நிலையில் இந்த ஓய்வின் மூலம் விராட் கோலிக்கு முக்கிய கெடு விதித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது கோலியின் இத்தனை ஆண்டுகள் சாதனைகளை கருத்தில் கொண்டு டி20 உலகக்கோப்பை தொடர் கோலிக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். அதிலும் அவர் சொதப்பினால், இனி டி20 அணியில் நீக்கியே தீர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ அதிகாரி பேச்சு

பிசிசிஐ அதிகாரி பேச்சு

இதுகுறித்து பேசிய தேர்வுக்குழு அதிகாரி, ஒரு வீரருக்கு ஏற்றத் தாழ்வுகள் இருக்கதான் செய்யும். ரகானே, புஜாரா உள்ளிட்ட பல முன்னணி வீரர்களும் பல வாய்ப்புக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளனர். கோலி முழு உடற்தகுதியுடன் இருந்தால், டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார். ஆனால் அதில் ஃபார்முக்கு வரவில்லை என்றால், உள்நாட்டு போட்டிகளில் விளையாடிவிட்டு தன்னை நிரூபித்துவிட்டு தான் அணிக்கு வர வேண்டும் எனக் கூறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

23 போட்டிகளில் இல்லை

23 போட்டிகளில் இல்லை

விராட் கோலிக்கு ஓய்வு கொடுப்பது இது முதல்முறையல்ல. கடந்த 12 மாதங்களில் கேன் வில்லியம்சனுக்கு பிறகு கோலி தான் அதிகம் ஓய்வு எடுத்துக்கொண்ட வீரர். டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் 23 சர்வதேச போட்டிகளில் விராட் கோலி விளையாடவில்லை. இதனால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Saturday, July 16, 2022, 16:27 [IST]
Other articles published on Jul 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+