For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்.. ரசிகர்களுக்கு பிசிசிஐ தந்த மெகா சர்ஃப்ரைஸ்.. வரலாற்று தொடராக மாறுகிறது

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள சூழலில் பிசிசிஐ இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நிறைவடைந்துவிட்டது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரின் கவனமும் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை மீது திரும்பியுள்ளது.

4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்த போட்டி பெரும் திருப்புமுணையை ஏற்படுத்தலாம்.

அவர் இல்லைனா இந்தியா ஜெயிக்காது.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. ரோகித்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை! அவர் இல்லைனா இந்தியா ஜெயிக்காது.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. ரோகித்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை!

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஆஸி, டெஸ்ட் தொடர்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்திய அணி 2வது இடத்திலும் உள்ளது. இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி பெற்றே தீர வேண்டும். இதற்காக இந்திய அணி நாக்பூரிலும், ஆஸ்திரேலிய அணி பெங்களூருவிலும் பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டனர்.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

இந்நிலையில் இத்தொடர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் கண்டுகளிக்கவுள்ளார். இவருடன் சேர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஷும் போட்டியை நேரில் காண வரவுள்ளார். இந்த நிகழ்வு வரும் மார்ச் 9 முதல் 13ம் தேதி வரை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வரலாற்று சிறப்பு

வரலாற்று சிறப்பு

அகமதாபாத் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டதில் இருந்து ஒருமுறை கூட அவர் போட்டியை காண வரவில்லை. முதல்முறையாக இந்த பிரமாண்ட போட்டியை காண வருகை தருகிறார். இதுமட்டுமல்லாமல் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் கடைசி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இதுதான். இப்படி பலகட்ட எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடயே எழுந்துள்ளது.

இந்தியாவின் பலம்

இந்தியாவின் பலம்

எனினும் இந்தியாவுக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற 3 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்தியாவை, சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமாகும். கடைசியாக 2005ம் ஆண்டு தான் ஆஸ்திரேலியா இதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 2, 2023, 22:36 [IST]
Other articles published on Feb 2, 2023
English summary
BCCI gives a special surprise on India vs australia Border gavaskar trophy Test series, PM Narendra modi and Australian PM to attend the historic match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X