புதிய ஐ.பி.எல். அணிகளுக்கு கெடு விதித்த பி.சி.சி.ஐ..!! அதிர்ச்சியில் அகமதாபாத், லக்னோ அணிகள்..!!
பெங்களூரு: ஐ.பி.எல். மெகா ஏலம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதற்காக எந்த வீரர்களை குறிவைப்பது, இருக்கும் பணத்தை எப்படி ஏலத்தில் பயன்படுத்துவது என்பது குறித்து ஐ.பி.எல். அணிகள் ஆலோசித்து வருகின்றன.
இந்த நிலையில், புதியதாக இணைந்துள்ள ஐ.பி.எல். அணிகளுக்கு பி.சி.சி.ஐ. வாய்ப்பு ஒன்றை வழங்கியது. ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காய் நகர்த்திய அணிகள்
மெகா ஏலத்தையொட்டி பழைய ஐ.பி.எல். அணிகள் மூன்று, அல்லது நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துவிட்டு மற்றவர்களை ஏலத்திற்கு அனுப்பியுள்ளனர். இதில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா , வார்னர் போன்ற நட்சத்திர வீரர்களை ஏலத்தில் மீண்டும் தேர்வு செய்வது கடினம். இதனால் பி.சி.சி.ஐ. வழங்கிய வாய்ப்பை வைத்து புதிய அணிகள் காயை நகர்த்த தொடங்கின

கே.எல்.ராகுல் சர்ச்சை
குறிப்பாக கே.எல்.ராகுலிடம் ஆசை வார்த்தை கூறி, பஞ்சாப் அணியில் தொடர வேண்டாம் என லக்னோ அணி கூறியது. இது தொடர்பாக பஞ்சாப் அணி, பி.சி.சி.ஐ.யிடம் புகார் அளிக்க , அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போன்று ஐதராபாத் அணியில் இடம்பெற்ற ரஷித் கானையும் லக்னோ அணி, ஏலத்திற்கு முன்பே தேர்வு செய்ய முடிவு எடுத்தது.

ஏலம் மீதே ஆசை
இதே போன்று ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு முன்பே தேர்வு செய்ய அகமதாபாத் அணியும் நடவடிக்கையை மேற்கொண்டன. ஆனால் புதிய அணிகள் வழங்கும் தொகையை விட ஏலத்திற்கு சென்றால் 18 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்று நட்சத்திர வீரர்கள் யோசிக்கின்றனர். இதனால் அவர்களை ஒப்பந்தம் செய்வதில் புதிய அணிக்கு தலைவலியாக உள்ளது
Recommended Video

புதிய அணிகள் அதிர்ச்சி
இதனிடையே, ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை தேர்வு செய்ய வரும் 22ஆம் தேதி மாலை 5 மணியே கடைசி என்று புதிய அணிகளுக்கு பி.சி.சி.ஐ. கெடு விதித்துள்ளது. பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்பால் அகமதாபாத், லக்னோ அணிகள் அதிர்ச்சியில் உள்ளன. ஜனவரி 31ஆம் தேதி வரை நேரம் இருப்பதாக கூறி விட்டு, தற்போது திடீரென்று காலக்கெடுவை குறைத்தால் தாங்கள் என்ன செய்ய முடியும் என்று அந்த அணிகள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications