Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 4 நாட்கள் தான்.. ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கடைசி வாய்ப்பு

மும்பை: ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகளில் பிசிசிஐ தேர்வுக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது.

Recommended Video

IND vs SL தொடரில் திடீர் மாற்றம் செய்த BCCI *Cricket

நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறுகிறது.

 ஆசியக்கோப்பை தொடர்

ஆசியக்கோப்பை தொடர்

ஆசியக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுவிட்ட சூழலில் இந்திய அணியையும் இறுதி செய்ய பிசிசிஐ களமிறங்கியுள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெறும் 4வது மற்றும் 5வது டி20 போட்டி அதற்கான கடைசி வாய்ப்பாக வீரர்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த டி20 தொடர் வரும் ஆகஸ்ட் 7ம் தேதியன்று முடிவடைகிறது.

அணி தேர்வு

அணி தேர்வு

இந்நிலையில் போட்டி முடிந்த மறுதினமே (ஆகஸ்ட் 8 ) இந்திய அணி தேர்வு மும்பையில் நடைபெறுகிறது. இதற்காக தேர்வுக்குழு அதிகாரிகள் அனைவரும் நேரில் கூடுகின்றனர். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் ஹூடா ஆகியோரில் யாரை சேர்ப்பது என விவாதிக்கப்படவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்து வரவுள்ளதால், அதனை மனதில் வைத்து அணி உருவாக்கப்படலாம்.

பவுலிங் தேர்வு

பவுலிங் தேர்வு

பந்துவீச்சை பொறுத்தவரையில் யுவேந்திர சாஹல் மற்றும் ரவீந்திர ஜடேஜா முதன்மை தேர்வாக உள்ளனர். 3வது ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படுவாரா அல்லது ரவி பிஷ்னாய் சேர்க்கப்படுவாரா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இவை வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான கடைசி 2 போட்டியை வைத்து கணிக்கப்படும்.

 வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் முதன்மை தேர்வாக உள்ளனர். இவர்களை தொடர்ந்து முகமது சிராஜ் சேர்க்கப்படுகிறார். ஹர்ஷல் பட்டேல் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்த சூழலில் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் எழுந்துள்ளது.

Story first published: Thursday, August 4, 2022, 16:38 [IST]
Other articles published on Aug 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+