
ஜடேஜா
பிசிசிஐ வெளியிட்டுள் 2023 ஆண்டிற்கான பட்டியலில் ஜடேஜாவின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ பிரிவில் இருந்த ஜடேஜா, தற்போது a+ பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ர். . இதன் மூலம் தற்போது முதல் பிரிவில் கோலி ,ரோகித் சர்மா, ஜடேஜா என 4 வீரர்களின் ஆண்டு ஊதியம் 7 கோடி ரூபாய் ஆக உள்ளது.

ராகுல்
டெஸ்ட் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ராகுல் ஊதியம் அதிரடியாக 5 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிரடியாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் ஊதியம் 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்
இதேபோன்று இந்திய அணி டி20 அணியின் கேப்டன் பதவியில் உயர்த்தப்பட்ட ஹர்திக் பாண்டியாவின் ஊதியம் ஒரு கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. இதேபோன்று சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரின் ஊதியம் ஒரு கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஓப்பந்தத்தில் புதிய வீரர்கள் ஆர்ஸ்தீப் சிங் மற்றும் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிரடி நீக்கம்
தீபக் ஹூடா, சாஹல், சஞ்சு சாம்சன், ஆகியோருக்கு சி பிரிவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் 8 ஆண்டுகளுக்கு பிறகு பிசிசிஐ ஒப்பந்தத்தில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். இதனிடையே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நீக்கப்பட்ட ரஹானே, விரித்திமான் சாஹா, இஷாந்த் சர்மா, மாயங் அகர்வால்,ஹனுமன் விகாரி, ஆகியோர் புதிய ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர், அனுபவ வீரர் புவனேஸ்வவர் குமாரும் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.


Click it and Unblock the Notifications











